மதுரையில் சீறிப் பாயும் வைகை வெள்ளம்.. நடு ஆற்றில் 'மப்பில் மட்டையான' குடிகாரர்கள்..திக் திக்!
மதுரை: மதுரை மாநகரில் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மதுரை நகரின் தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ள நீர் சீறிப் பாய்வதால் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வைகை ஆற்றின் நடுவே சிம்மக்கல் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை உணரமுடியாமல் குடிபோதையில் 2 இளைஞர்கள் படுத்து தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணியின் மொத்த கொள்ளளவு 71 அடி. தற்போது வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை வெளுத்தெடுத்ததால் அணையின் நீர்மட்டம் 67 அடியை தாண்டியது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து சுமார் 6,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் வைகை அணை நீர் பாசன மாவட்டங்கள் பயனடையும்.

வைகை அணையில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மதுரை மாநகரில் வைகையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வைகை ஆற்றின் இரு கரைகளையும் ஆரத் தழுவியபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இருப்பினும் வைகை நதி ஓடும் பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் விரிந்து படர்ந்து கிடப்பது பேராபத்தாகவும் இருந்து வருகிறது. இதனால் மதுரை மாநகரில் வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, கால்நடைகளைக் குளிப்பாட்டவோ, துணிகளை துவைக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைகை நதி ஆழ்வார்புரம், யானைக்கல், சிம்மக்கல் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் சீறிப் பாய்ந்து நகரத்துக்குள்ளும் ஓடுகிறது. இதனால் இந்தப் பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. போலீசாரும் வைகை நதி கரையில் இடைவிடாமல் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

இதனிடையே சிம்மக்கல் பகுதியில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதை உணராமல் தூண்களுக்கு அடியில் குடிகாரர்கள் 2 பேர் நிதானம் இழந்த நிலையில் மயங்கி கிடந்தனர். ஆற்றில் வெள்ளம் ஓடிய நிலையிலும் போக்குவரத்து போலீசார் ஒருவர் ஆற்றுக்குள் இறங்கி மப்பில் உறங்கியவர்களை தட்டி எழுப்பி கைத்தாங்கலாக வெள்ள நீரில் அழைத்து வந்து பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications