செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தது! ஆட்டம் தொடங்கியாச்சு!
வேலூர்: தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இன்று வேலூரில் 102 டிகிரி வெயில் பதிவாகியிருக்கிறது. அடுத்தடுத்து வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மார்ச்.9ம் தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
10ம் தேதி தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
11ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
12ம் தேதி மற்றும் 13ம் தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று வேலூரில் 102 டிகிரி வெயில் பதிவாகியிருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
- வேலூர் - 103.3
- மதுரை விமான நிலையம் - 101.3
- கரூர் பரமத்தி - 100.8
- திருச்சிராப்பள்ளி-100.6
- ஈரோடு-100.4
- மதுரை நகரம்-99.3
- சேலம்-99.0
- தர்மபுரி-98.6
- திருப்பத்தூர்-98.4
- திருத்தணி-96.8
- தஞ்சாவூர்-96.8
- கோயம்புத்தூர்-96.3
- பாளையங்கோட்டை-95.9
- சென்னை (மீனம்பாக்கம்)-94.8
- தொண்டி-92.8
- கன்னியாகுமரி-92.3
- தூத்துக்குடி-91.9
- பாம்பன்-91.9
- கடலூர்-90.7
- சென்னை (நுங்கம்பாக்கம்)-90.5
- அதிராமப்பட்டினம்-90.5
- புதுச்சேரி-90.5
- நாகப்பட்டினம்-90.0
- பரங்கிப்பேட்டை-89.2
- காரைக்கால்-88.9
- வால்பாறை -82.4
- குன்னூர்-76.1
- உதகமண்டலம் -72.3
- கொடைக்கானல்-70.5
என வெயில் பதிவாகியிருக்கிறது.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications