வியர்க்கும் வேலூர்.. 101.4 டிகிரி வெயிலா அடிக்கிறது? இப்பவே கண்ணை கட்டுது.. சம்மருக்குள்ள என்னாகுமோ

Subscribe to Oneindia Tamil

வேலூர்: இன்னும் கோடை காலமே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் அக்னி நட்சத்திரம் போல வெயில் கொளுத்த துவங்கிவிட்டது.. அதிலும் வேலூர் மாவட்டத்தில் நிலைமை ரொம்ப மோசம்.. கடந்த பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் ஆதிகரித்த நிலையில், இப்போது உக்கிரத்தில் வெப்பம் தகித்து காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் வெயில் நகரமான வேலூரில் கோடை துவங்கும் முன்பே வெயில் கொளுத்த துவங்கிவிட்டது.. இந்த மார்ச் மாத துவக்கத்திலேயே 95 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரித்தது.. 100 டிகிரியை கடந்து வெயில் அப்போதே ஆரம்பமாகிவிட்டது..

Vellore weather heat

வடகிழக்கு பருவமழை

கோடை தொக்கம் தொடங்கியதால் வேலூரில் 101.4 டிகிரி வெயில் இன்றுகூட கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். வழக்கமாக வேலூரில் வெயில் அதிகமாக இருக்கும் என்றாலும், இந்த முறை, வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யவில்லை. இதன்காரணமாக, ஏரிகள், குளங்கள் எல்லாம் வறண்டு உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சரியாக மழை பெய்யவில்லை.

இந்தாண்டு மார்ச் மாதம் தொடக்கத்திலேயே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரிக்கு மேலாக கொளுத்தி வரும்நிலையில், வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம், சற்று ஓவராகவே காணப்படுகிறது.. அதிலும், கடந்த 6ம் தேதி முதல் முறையாக வேலூர் மாவட்டத்தில் 100.6 டிகிரி வெயில் கொளுத்தியது.

கலக்கம், அச்சம், பீதி

அதற்கு பிறகு மெல்ல மெல்ல 100 டிகிரிக்குள் குறைந்தது. லேசான மழையும் அவ்வப்போது பெய்வது மாவட்ட மக்களுக்கு ஓரளவு நிம்மதியை தந்துள்ளது.. அந்தவகையில், கடந்த 12ம் தேதி 90.7 டிகிரியாகவும், நேற்று முன்தினம் 95.5 டிகிரியாகவும், நேற்று 101.4 டிகிரியாகவும் வெயில் பதிவாகியிருக்கிறது.. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர்..

ஆரம்பமே 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்திவிட்டதால், இன்னும் மே மாதம் என்னாக போகுதோ? என்ற கவலையிலும், அச்சத்திலும் உள்ளனர்.. வரும் நாட்களில் மேலும் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது, அதற்கு மேல் பீதியை கிளப்பிவிட்டுள்ளது. எப்படிதான் இந்த வெயிலை சமாளிப்பது? என்று தெரியாமல் விழிபிதுங்கி உள்ளது வேலூர்.

குடை, தொப்பி, துணி,

வேலூர் தவிர சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெயில் கொளுத்தி எடுக்கிறது.. தலையில் தொப்பி, துணி, ஹெல்மெட், கூலிங்கிளாஸ், கையில் கிளவுஸ் என வாகன ஓட்டிகளை காண முடிகிறது.. பலர் குடையுடன் நடமாட துவங்கிவிட்டார்கள்.

மற்றொபுறம், கரும்பு ஜூஸ், இளநீர், என கடைகளும் பெருகிவிட்டதால், அந்தந்த கடைகளில் மக்கள் தஞ்சமடைந்தனர். தர்பூசணி, கம்மங்கூழ், மோர் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+