எல்லோர் வீட்டிலிருந்தும் வந்த அரிசி, பருப்பு! ரயில் பயணிகளின் பசியை போக்கிய கிராமத்தினர்! நெகிழ்ச்சி
திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில், திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த ரயில் ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலில் 36 மணி நேரமாக உணவு, குடிநீர் இன்றி தவித்த பயணிகளுக்கு அருகில் இருந்த கிராமத்தினர் உணவு வழங்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் இந்த மழை வேகமெடுத்தது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் சட்டென நிரம்பின. மட்டுமல்லாது அதிலிருந்து வெளியேறிய உபரிநீர் ஊருக்குள் பாய்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கின்றன.

மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கிராமப்புறங்களை விட நகர் பகுதிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தனியார் பேருந்து நிறுவனங்கள், இந்த மழை வெள்ளம் காரணமாக தென் மாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்திருக்கின்றன. எனவே சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு சென்று, உறவினர்களின் நிலையை அறிந்துகொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், அப்பகுதிகளுக்கு சென்று நேரடி ஆய்வை மேற்கொள்ளவும் அமைச்சர்களுக்கும், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நேற்றைய நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செமீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செமீ மழையும், திருச்செந்தூரில் 67.9 செமீ மழையும் பதிவாகியுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவு பெருமழையாகும். மழை வெள்ளத்தால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூர் வந்துகொண்டிருந்த 'சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில்', நேற்று முன்தினம் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 3 நாட்களாக இந்த ரயிலில் இருந்த 700க்கும் அதிகமான பயணிகள் போதுமான உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். மீட்பு படையினர் முயற்சியால் முதற்கட்டமாக 100 பேர் வரை மீட்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், அதன் பின்னர் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலைகள் மழை வெள்ளத்தால் மூழ்கியதால் மீட்பு படையினரால், மேற்கொண்டு முன்னேர முடியவில்லை.
இந்த ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால், நீரின் வேகம் அதிகரித்திருக்கிறது. எனவே படகுகளை கொண்டு கூட ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே கடந்த 36 மணி நேரத்திற்கும் மேல் ரயில் பயணிகள் போதுமான உணவு, குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். இன்று காலைதான் ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நிறைமாத கர்ப்பிணி பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், “நாங்கள் கடந்த 3 நாட்களாக ரயிலிலும், நடைபாதையிலும் தங்கி வருகிறோம். எங்களுக்கு அரசு தரப்பில் எந்த உதவியும் செய்து கொடுக்கப்படவில்லை. இன்று காலை 3 ஹெலிகாப்டர்கள் வந்தன. அதில் கர்ப்பிணி பெண் ஒருவர் மீட்கப்பட்டார். அதேபோல உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. ஹெலிகாப்டரிலிருந்து பிஸ்கெட், தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன. அவை கீழே விழுந்து உடைந்துவிட்டது. உணவு பொருட்கள் கீழே வீசப்பட்டதால் அனைத்தும் சேதமடைந்துவிட்டன.
குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் இங்கு இருக்கின்றனர். அவர்களுக்கு உணவும், மருந்தும் உடனடி தேவையாக இருக்கிறது. ஆனால் ஹெலிகாப்டரிலிருந்து வீசப்பட்ட உணவு போதுமானதாக இல்லை. ஸ்ரீவைகுண்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த கிராம மக்கள்தான் எங்களுக்கு உணவை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்” என்று கூறியுள்ளனர்.
உணவு கொடுத்த கிராமத்தை சேர்ந்த முதியவர் கூறுகையில், “ரயில் ஒரு இரவை கடந்தும் இங்கேயே நின்றுக்கொண்டிருந்தது. அதன் பின்னர்தான் ரயில் சிக்கியிருப்பதை நாங்கள் உணர்ந்தோம். பின்னர் ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து எங்களிடம் இருந்த பால் எல்லாவற்றையும் காய்ச்சி டப்பாவில் அடைத்து குழந்தைகளுக்கு கொண்டு வந்து கொடுத்தோம். ஆனாலும் பால் போதவில்லை, எனவே சர்க்கரையை கொண்டு கடுங்காபி போட்டு கொடுத்தோம்.
குழந்தைகளுக்கு ஓகே ஆனால், பெரியவர்களாலும் ஒரு கட்டத்திற்கு மேல் பசி தாங்க முடியவில்லை. எனவே ஊர் மக்கள் சேர்ந்து எங்களிடம் இருந்த அரிசி, பருப்பை போட்டு உணவு செய்து கொடுத்தோம். சிக்கியிருப்பவர்களை பத்திரமாக மீட்டு அனுப்ப வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. முதியவர்கள் பலரும் சர்க்கரை நோயால் கடுமையாக அவதியடைந்தனர். அவர்களுக்கு எங்களிடம் இருந்த மருந்து மாத்திரைகளை கொடுத்து உதவினோம். பயணிகள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்" என்று கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications