இரவில் கொட்டிய கனமழை.. காலையில் பல பகுதிகளில் வடிந்த மழைநீர்! முக்கிய சுரங்கப்பாதைகளின் நிலை என்ன
சென்னை: தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டிய நிலையில், பல பகுதிகளிலும் நீர்த் தேக்கம் அகற்றப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை இரவு வரை கொட்டி தீர்த்தது. நகர்ப் பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை கொட்டிய நிலையில், பொதுமக்கள் இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

நேற்றிரவு பெய்த கனமழையால் நகரின் முக்கிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அலுவலகத்தில் இருந்து கிளம்பிய பொதுமக்கள் தங்கள் வீட்டிற்குத் திரும்பவே தாமதமானது.
மழை: கனமழை பெய்த நிலையில், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனடியாக களத்தில் இறங்கி மழை நீர் தேங்குவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுத்தனர். நகரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நேற்றிரவு மட்டும் 16 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகச் சென்னை மேயர் பிரியா தெரிவித்தார். மேலும், மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் காலையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் அகற்றப்படும் என்றார்.
தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தால், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அதற்குத் தேவையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார். மேலும், காலை உணவு தேவை என்றால் மண்டலம் வாரியாக உணவைத் தயாரித்து அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி: இதற்கிடையே சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழை குறித்தும் இதனால் நீர் தேங்கியது குறித்தும் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று காலை வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்றிரவு பெய்த கனமழையால் நகர் முழுக்க 145 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அதில் 68 இடங்களில் தற்போது முழுமையாக மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. 77 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
கனமழையால் 5 இடங்களில் மரங்கள் விழுந்த நிலையில், அவை அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், மழை தொடர்ந்து பெய்து வந்தால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும் அபாயம் இருக்கும் நிலையில், அவற்றை மோட்டார் மூலம் வெளியேற்றவும் தயார் நிலையில் 296 மோட்டார்கள் உள்ளன. அதில் 40 மோட்டார்கள் இப்போது தேங்கியுள்ள நீரை வெளியேற்றப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சுரங்கப்பாதைகள்: மழை நீர் உடனுக்கு உடன் வெளியேற்றப்பட்டதால் இன்று காலை பெரும்பாலும் எந்தவொரு சுரங்கப்பாதையிலும் மழை நீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. மழைநீர் காரணமாகச் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கராஜபுரம் டூவீலர் வாகன சுரங்கப்பாதை மட்டுமே மூடப்பட்டுள்ளது. அதைத் தவிர நகரில் அனைத்து சுரங்கப்பாதைகளும் வழக்கம் போலவே இயங்குகிறது.
கெங்குரெட்டி, மேட்லி உள்ளிட்ட 4 சுரங்கப்பாதைகளில் மழை நீர் கொஞ்சம் தேங்கியுள்ள போதிலும் அங்கே வாகன போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மழை அளவு: நகர்ப் பகுதிகள் மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் மழை கொட்டிய நிலையில், சென்னையைச் சுற்றியுள்ள நீர் பிடிப்பு பகுதிகளின் இருப்பு குறித்த தகவல்களையும் மாநகராட்சி பகிர்ந்துள்ளது. அதன்படி செங்குன்றத்தில் நேற்று 29 மிமீ மழை பெய்துள்ளது. அங்கே மொத்த கொள்ளளவு 21.20 அடியாக இருக்கும் நிலையில், இப்போது 19.08 அடி நீர் இருக்கிறது.
அதேபோல சோழவரம் ஏரி பகுதியில் நேற்று 36 மிமீ மழைநீர் பெய்துள்ளது. அங்கே மொத்த கொள்ளளவு 18.86 அடியாக இருக்கும் நிலையில், 16.34 அடி நீர் நிரம்பியுள்ளது. பூண்டி ஏரியில் 15 மிமீ மழை பெய்துள்ள நிலையில், அங்கே மொத்த கொள்ளளவான 35 அடியில் 31 அடிக்கு நீர் தேங்கியுள்ளது. மேலும், செம்பரம்பாக்கத்தை பொறுத்தவரை அங்கே ஒரே நாளில் 10.80 மிமீ மழை பெய்துள்ளது. அங்கே மொத்த கொள்ளளவு 24 அடியாக இருக்கும் நிலையில், 22.35 அடிக்கு நீர் தேங்கியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications