டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. மற்ற ஏரியாவில்? வெதர்மேன் கொடுத்த அலர்ட் மெசேஜ்!
சென்னை: இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல இடங்களில் மிதமானது முதல் சற்றே கனமழை வரையிலும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் இன்று வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது. திடீரென வெயில் அடித்தாலும், மேகமூட்டத்துடன் மிதமான மழையும் பெய்து வருகிறது. நேற்று நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், சாத்தூர், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் வெயில் நிலவுகிறது.

இந்த நிலையில், வரும் டிசம்பர் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (டிசம்பர் 9) முதல் டிசம்பர் 14 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வானிலை அமைப்பு
இந்நிலையில், டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தனது வானிலை கணிப்பை வெளியிட்டுள்ளார். இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை கடல்பகுதி நோக்கி இந்தத் தாழ்வு நிலை நகரக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய வானிலை (09.12.2025)
மேலும், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் இன்று (09.12.2025) வறண்ட வானிலையே நிலவும்.
தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல இடங்களில் மிதமானது முதல் சற்றே கனமழை வரையிலும், ஒருசில இடங்களில் கனமழையும் பதிவாகும்.
நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட விவசாயிகள் மட்டும் இன்றும், நாளையும் வேளாண்மை பணிகளை தள்ளி வைப்பது நல்லது.
கனமழைக்கு வாய்ப்பில்லை
பிற அனைத்து மாவட்ட விவசாயிகளும் அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் மேற்கொள்ளலாம். பூச்சிக் கட்டுப்பாடு, களைக் கட்டுப்பாடு பணிகளை மேற்கொள்வதற்கு சிறந்த நாளாக அமையும்.
வடமாவட்டங்கள், உள் மாவட்டங்களில் வேளாண்மை பணிகளை பாதிக்கும் அளவிற்கு டிசம்பர் 15 வரை மழை வாய்ப்பு இல்லை. அனைத்து பணிகளையும் திட்டமிடலாம் என டெல்டா வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications