பிச்சி உதறுது மழை.. தமிழ்நாட்டின் இந்த 6 மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை.. வந்தது மேஜர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளிமண்டல சுழற்சி மேற்கு திசை காற்று காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்ய உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

weather news and heavy rain in tamil nadu for 3 days, says meteorological department

அதன்படியே, கடந்த 2, 3 நாட்களாகவே தொடர் மழை தமிழகத்தின் மாவட்டங்களிலும் பெய்து வருகிறது.. இதனிடையே, வானிலை மையம் வெளியிட்டிருந்த அடுத்தடுத்த அறிவிப்புகளிலும் வரும் 6ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.. இந்நிலையில், நேற்றைய தினமும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் மழை: அந்த அறிவிப்பில் "நீலகிரி, கோவை, திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூா் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று திங்கள்கிழமை (ஜூலை 3) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை, செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த முதல் மிக பலத்த மழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஆரஞ்சு அலர்ட்: நாளை மறுநாள், புதன்கிழமை (ஜூலை 5) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, புகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வளிமண்டல சுழற்சி மேற்கு திசை காற்று காரணமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.. இன்று திங்கள் கிழமை, 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

பள்ளி விடுமுறையா: திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்" என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. மாவட்டங்களில் தொடர் மழை என்பதாலும், இன்றையதினம் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+