ஆரம்பமே அசத்தல்..சுழட்டி சுழட்டி வெளுக்கும் மழை.. தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களுக்கு முக்கிய அறிவிப்பு
சென்னை: வரும் 6-ம் தேதி வரை தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தாமதமாக இந்த வருடம் துவங்கி உள்ளது.. வழக்கமாக, ஜுன் 1-ம் தேதி தொடங்கி 38 நாட்களில் பரவலான மழையை நாடு முழுவதும் தந்துவிட்டு செல்லும்..

ஆனால், இந்த முறை தாமதமாக அதாவது 8ம் தேதிதான் துவங்கியிருக்கிறது.. 25 நாட்களுக்குள் நாடு முழுவதும் பருவமழை பெய்யத்தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடந்த 25 வருடங்களில் 13-வது முறையாக இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருக்கிறது.
தொடர்கிறது மழை: அதன்படி, கடந்த சில தினங்களாகவே மழை தீவிரமாகி வருகிறது.. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.
மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நேற்றுகூட, தமிழகத்தின் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, திருப்பூர், தேனி, மயிலாடுதுறை, நாகை, தென்காசி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமாரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் கூறியிருந்தது.
வானிலை மையம்: இந்நிலையில், இந்த மழை தொடரும் என்றும், பருவமழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 6ம் தேதி வரைக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் 6-ம் தேதி வரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குளிர்ந்த காற்று: சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் காலையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. குளிர்ந்த காற்றுடன் சிறு சிறு தூறலாக மழை பெய்தது. வானம் மேக மூட்டத்துடன் அவ்வப்போது லேசாக மழை பெய்து வருகிறது. ஊட்டியில் நிலவும் மழைச்சாரல் போல காலையில் காணப்பட்டது.
இதனிடையே, நீலகிரி, கோவைக்கு மிக கனமழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 43 பேர் ஊட்டி வந்துள்ளனர்.. மாவட்ட கலெக்டர் சந்தித்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மாவட்டத்தில் அபாயகரமான பகுதிகளையும் கேட்டறிந்தனர்.
கலெக்டர் நம்பிக்கை: இப்போதைக்கு 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. 283 அபாயகரமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. 42 குழுக்கள் தனியாக கண்காணித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளும் கனமழை பாதிப்புகளை சரிசெய்ய தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications