தமிழகத்தில் 4 நாட்களுக்கு சூரியன் சுட்டெரிக்கப் போகுது.. வானிலை மையம் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயில் நிலவி வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 25 ஆம் தேதி, திங்கள்கிழமை) முதல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்தும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) முதல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.

Tamilnadu weather Chennai

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள்:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை:

ஆகஸ்ட் 25 மற்றும் 25 ஆகிய தேதிகளில் (செவ்வாய், புதன்) ஆகிய இரண்டு நாட்கள் தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+