பெங்கல் புயல் நெருங்கும் நேரம் பார்த்து.. மெரினா பீச்சில் ஒதுங்கிய ராட்சசன்.. என்ன இது? ஷாக்
சென்னை: மெரினாவில் கடல் சீற்றம் காரணமாக மிதவை ஒன்று கரை ஒதுங்கியது. கடலில் ஆபத்தான இடங்களை படகு மற்றும் கப்பல்களுக்கு அடையாளம் காட்டும் மிதவை கருவி கரை ஒதுங்கியது.
தமிழ்நாடு வானிலை மைய அறிவிப்புப்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மற்றும் புதுக்கோட்டை இடங்களில் கனமழை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கனமழை பெய்யும். நகரின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கரை ஒதுங்கியது: மெரினாவில் கடல் சீற்றம் காரணமாக மிதவை ஒன்று கரை ஒதுங்கியது. கடலில் ஆபத்தான இடங்களை படகு மற்றும் கப்பல்களுக்கு அடையாளம் காட்டும் மிதவை கருவி கரை ஒதுங்கியது. இது கண்டிப்பாக பல ஆண்டுகள் பழையது என்று கருதப்படுகிறது. மிக மோசமான நிலையில் இந்த மிதவை கரையொதுங்கியது.
மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆராய்ச்சி சேமிப்பு மிதவை pic.twitter.com/35MruSJgX8
— Thamaraikani (@kani_twitz24) November 27, 2024
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடைந்து வருகிறது. வானிலை மைய கணிப்புபடி இன்று அது புயலாக மாறும். இதற்கு 'FENGAL - பெங்கல்' என பெயர் சூட்டப்படும். இப்பெயரை சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது. இந்த புயல் கரையை கடப்பது தொடர்பான முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளன.
இந்த புயல் நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் உள்ளது, கடல் பரப்பில் மேல் வெப்பநிலை அதிகம் உள்ளது இதன் காரணமாக புயல் உருவாவதற்கான.. அது வலிமை அடைவதற்கான சாதகமான சூழல்கள் உள்ளன. சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 800 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரத்து வருகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். டெல்டா அருகே மழையை கொடுப்பது போல வந்தாலும் 30ம் தேதி புயல் கரையை கடக்கும். அந்த நாளும்.. அதற்கு முதல் இரண்டு நாட்களும் கண்டிப்பாக சென்னைக்கும் மழையை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications