சும்மா அதிருச்சுல்ல! டமால் டுமீல் மழைக்கு என்ன காரணம்? புல் எஃபெக்ட்னா சும்மாவா? வெதர்மேன் விளக்கம்
சென்னை: சென்னையில் இன்று காலை திடீரென ஏன் இடியுடன் கூடிய மழை பெய்தது என்பதை வெதர்மேன் தனது பதிவில் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நவம்பர் மாதம் முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது.

அது போல் சென்னையிலும் பல நாட்கள் கனமழை வெளுத்து வாங்கியது. தீபாவளி பண்டிகைக்கு பிறகெல்லாம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் நீர் நிலைகள் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கடந்த இரு தினங்களாக வெயில் அடித்தது. நேற்று முன் தினம் லேசான வெயில் வந்தது. அடுத்து நேற்று காலை முதலே வெயில் அடிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் இன்றைய தினம் திடீரென இரவு முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் கனழை பெய்தது.
அதிகாலை வரை இடி, மின்னலுடன் இந்த மழை நீடித்தது. இதனால் இன்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மழைக்கு என்ன காரணம் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட தொடர் பதிவுகளில் இந்த டமால் டுமீல் இடி சும்மா அதிருதுல்ல!
செம மழை. அடையாறில் 73 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது மழையை கொடுக்கும் மேகக் கூட்டங்களால் பெய்த மழைன்னா சும்மா வா. சென்னையில் திடீரென வெயில் வரும். மழை பெய்யும். கடலில் சில மேகக் கூட்டங்கள் உருவாகியுள்ளன. இவையும் மழையை தரும். ஆனால் வெயில் வரும். மழை குறையும். அண்ணாநகர்- நுங்கம்பாக்கம் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அவர் போட்ட பதிவில், இன்று (நேற்று) சற்று டல்லான நாள்தான். தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை வரும். திடீரென சூரியன் வரும், உடனே மழை பெய்யும். இதுதான் நேற்றைய பேட்டர்னாக இருந்தது. ஆனால் நேற்று இரவு அல்லது இன்று அதிகாலை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்திருந்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications