சென்னையை விட்டுருங்க.. தமிழ்நாட்டில் இனி இங்கதான் மழை பெய்ய போகுது.. தமிழ்நாடு வெதர்மேன் பதிவு
சென்னை: சென்னையை நோக்கி அடுத்த 2 வாரங்களுக்கு எந்த புயலும் வரவில்லை. சென்னையில் இனி 20 - 24 ஆம் தேதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யலாம். எனினும் இதை உறுதி செய்ய அதிக காலம் உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தான் வங்கக்கடலில் கடந்த 26 ஆம் தேதி உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையில் பேய் மழை பெய்தது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது.

அதன்பின் இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது. இந்த மழையால் கனமழை கொட்டி பெரும் பாதிப்பை சென்னை சந்தித்துள்ளது. தற்போது சென்னையில் மழை விட்டு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் மீண்டும் ஒரு புயல் தாக்கக் கூடும் என்று வதந்திகள் பரவி வருகின்றன.
பிரதீப் ஜான் ட்வீட்: இந்த நிலையில், ஒவ்வொரு முறையும் மழை குறித்து அப்டேட் செய்யும் போதேல்லாம் மக்களுக்கு கொஞ்சம் பீதி ஏற்படுகிறது. சென்னையை நோக்கி அடுத்த 2 வாரங்களுக்கு எந்த புயலும் வரவில்லை என்றும் தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
சென்னை வானிலை குறித்த அப்டேட்டில் இருந்து விலகி செல்ல வேண்டிய நேரம் இது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நட்களுக்கு ஆங்காங்கே சிறிது மழை பெய்யலாம். எனினும், இது குறித்து அப்டேட் இருக்காது. ஒவ்வொரு முறையும் மழை குறித்து அப்டேட் செய்யும் போதேல்லாம் மக்களுக்கு கொஞ்சம் பீதி ஏற்படுகிறது.
அடுத்த 2 வாரங்களுக்கு: சென்னையை நோக்கி அடுத்த 2 வாரங்களுக்கு எந்த புயலும் வரவில்லை. சென்னையில் இனி 20-24 ஆம் தேதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யலாம். எனினும் இதை உறுதி செய்ய அதிக காலம் உள்ளது. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி (LoPAR) மேற்கு மாவட்டங்களில் மழையை கொண்டு வரும்.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களான திருச்சி, பெரம்பலூர், கரூர், டெல்டா பகுதிகளிலும் மழை பெய்யும். கேரள எல்லையோர மாவட்டங்களில் உள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்.
கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, தென்காசி, கொடைக்கானல், ஈரோடு, கோவை & திருப்பூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. கேரளாவிலும் நல்ல மழை பெய்யும். வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை செல்ல வாய்ப்புள்ளது" என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications