‛‛அலர்ட்’’.. சென்னையில் மீண்டும் தொடங்கிய மழை.. அடுத்த 7 நாள் வானிலை எப்படி இருக்கும் தெரியுமா?
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் இன்று சில இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இத்தகைய சூழலில் தான் சென்னையில் இன்று முதல் அடுத்த 7 நாள் வானிலை எப்படி இருக்கும்? என்பது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் கடந்த 5ம் தேதி ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது. முன்னதாக இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

கடந்த 3ம் தேதி இரவு முதல் 4 ம் தேதி நள்ளிரவு வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் சாலைகள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. பொதுமக்களால் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. குறிப்பாக சென்னை முழுவதுமாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 10 நாட்களாக சென்னையில் மழை இல்லை. இதையடுத்து வெள்ளத்தை அகற்றும் பணி தொடர்ந்து நடந்தது. தற்போது சென்னையில் மீண்டும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இத்தகைய சூழலில் தான் இன்று மீண்டும் சென்னையில் மழை பெய்தது.
இதற்கிடையே தான் நாளை (டிசம்பர் 16) மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 17) ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த 2 நாட்களும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் 10 முதல் 20 செமீ வரை மிக கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தான் சென்னையில் இன்று அடுத்த 7 நாள் வரை வானிலை நிலவரம் எப்படி இருக்கும்? என்பது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று வானம் மேகமூட்டத்துடன் இருப்பதோடு, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையான நாளை (டிசம்பர் 16) மற்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளை மறுநாள் (டிசம்பர் 17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதோடு லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 18ம் தேதி (திங்கட்கிழமை), டிசம்பர் 19 (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 20 (புதன்கிழமை), டிசம்பர் 21 (வியாழக்கிழமை) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருப்பதோடு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications