ரெமல் புயல் என்றால் என்ன? எந்த நாடு புயலுக்கு பெயரை வைத்தது?
சென்னை: வங்கக் கடலில் உருவாகும் தீவிர புயலான ரெமலின் அர்த்தம் என்ன? அந்த புயலுக்கு எந்த நாடு பெயரை வைத்தது? என்பதை தெரிந்து கொள்ளலாமா?
தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி நேற்றைய தினம் உருவானது. இது வடக்கு திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய வங்கக் கடலில் வலுப்பெறும்.

இந்த காற்றழுத்தம் அடுத்த 48 மணி நேரம் முதல் 72 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். வங்கக் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 30 டிகிரி சென்டிகிரேட்டுக்கு மேல் உள்ளது. இது புயல் உருவாவதற்கான போதிய வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் கொடுக்கும்.
புயல் உருவாக வாய்ப்பிருப்பதாகவும் ஆனால் தீவிர அல்லது மிக தீவிர புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். கடந்த 2020 ஆம் ஆண்டு அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகும் வெப்ப மண்டல புயல்களுக்கு பெயர்களை உருவாக உலக வானிலை மையம் முடிவு செய்தது. அதன் படி இந்திய வானிலை மையம் 169 புயல்களுக்கான பெயர்களை கொடுத்துள்ளது.
அந்த வகையில் வங்கக் கடலில் புயல் உருவானால் இந்திய வானிலை மையம் பரிந்துரைத்த பெயர்களில் ரெமல் என்ற பெயர் வைக்கப்படும். எனினும் இந்த பெயரை இந்திய வானிலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. புயல் உருவானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தெரிகிறது. அது போல் வரும் 26ஆம் தேதி வங்கதேசத்தில் இந்த புயல் ரெமல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை.
இந்த புயலால் வடகிழக்கு மாநிலங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. வரும் ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை வரை அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 200 மி.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது. அது இன்று முதலே மத்திய வங்கக் கடலில் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த புயலுக்கு அரபிக் மொழியில் மணல் என்ற அர்த்தம் உள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது.
இந்த நிலையில் தெற்கு கேரளா, அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழையும், வருகிற 25-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவும்.
மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25-ஆம் தேதி மாலை நிலவும். இதனால் குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 26 ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய வங்கக் கடலின் மத்திய பகுதிகள், தெற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் வரும் 25 ஆம் தேதி வரை அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான், தெற்கு வங்கக் கடல், குமரிக் கடலின் சில பகுதிகளில் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் பருவமழை படிப்படியாக தீவிரமடைந்து வருகிறது. இதனால் தெற்கு அரபிக் கடலின் சில பகுதிகள், மாலத்தீவின் பல பகுதிகள், குமரிக் கடல், தெற்கு வங்கக் கடல், அந்தமான் நிகோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது.
வழக்கமாக கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கும் ஆனால் இந்த ஆண்டு மே 31 ஆம் தேதி முன் கூட்டியே தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications