தென் மாவட்ட மக்கள் கனவிலும் எதிர்பாராத மழை! இப்படி கொட்டி தீர்க்க இதுதான் காரணம்? வெளியான ஆய்வறிக்கை
சென்னை: மழை பெய்யுமா என ஏங்கிய மக்களுக்கு மழை இனி வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு தூத்துக்குடியில் கனமழை வெளுத்து வாங்கியது. இப்படி சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை குறித்து 'கிளைமேட் டிரென்ட்ஸ்' எனும் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாகவே பெய்ய தொடங்கியது. ஆனாலும் டிசம்பர் மாதம் தொடங்கியதும் மழை தனது கோர முகத்தை காட்டியது. டிசம்பர் மாத துவக்கத்தில் சென்னையில் கிட்டத்தட்ட 2 நாட்கள் விடாமல் கொட்டியது. இதனால் சென்னை நகரம் வெள்ளத்தில் மிதந்தது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் கடும் கஷ்டப்பட்டனர்.

வெள்ளம் வடிந்து சென்னையில் இயல்பு நிலை திரும்ப ஒருவாரம் ஆகிவிட்டது. சென்னை பாதிப்பில் இருந்து மக்கள் வந்து கொண்டிருந்த நிலையில், தென் மாவட்டங்களை மழை பதம் பார்த்துவிட்டது. கடந்த 16, 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோரம் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துதது.
95 செ.மீ மழை: இதனால், வீடுகளை விட்டு மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள். நெல்லை நகரில் முக்கிய கடை வீதிகள் வெள்ளத்தில் தத்தளித்து கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட் சேதத்தையும் ஏற்படுத்தி விட்டு சென்றது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவாக ஒரே நாளில் 95 செ.மீட்டர் மழைபெய்தது. இதனால், காயல்பட்டினம் ஊரே சில நாட்களுக்கு தனித்தீவு போல ஆனது.
அதுபோக தூத்துக்குடியில் உள்ள பல ஊர்களில் குளம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கபட்டது. மழை பொய்த்து வானம் பார்த்த பூமியாக காட்சியளிக்கும் தூத்துக்குடி மாவட்டத்தின் தென் பகுதிகளான உடன்குடி, குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து. பூமியை நனைக்கும் அளவுக்கு மழை பெய்யுமா என எதிர்பார்த்த இப்பகுதி மக்கள், கனவில் கூட நினைக்காத அளவுக்கு பெருமழை பெய்து விட்டு சென்றது.
ஆய்வறிக்கை வெளியீடு: இப்படி தென் மாவட்டங்களை அடியோடி புரட்டி விட்டு மழையால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர். தற்போதும் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில இடங்களில் குளம் உடைப்பால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பாமலே உள்ளது. மழை பெய்யுமா என ஏங்கிய மக்களுக்கு மழை இனி வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வெளுத்து வாங்கிவிட்டு சென்றது.
இப்படி திடீரென பெய்த பெருமழைக்கு அதிகரித்து வரும் கால்நிலை மாற்றம் மற்றும் எல் நினோ பாதிப்புகள் தான் காரணம் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில், தான் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை குறித்து 'கிளைமேட் டிரென்ட்ஸ்' எனும் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் அந்த நிறுவனம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கால நிலை மாற்றம்: பொதுவாக வடகிழக்கு பருவமழை என்பது 70 நாட்கள் நீடிக்கும். தமிழக ஆந்திர கடலோரங்களைத் தான் அதிகம் பாதிக்கும். இயல்பான மழை அளவு 430.70 மி.மீட்டர் என்றாலும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் 453.70 மி.மீட்டர் மழை பெய்தது. கால நிலை மாற்றமே இந்த கனமழைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சுழற்சி வெப்ப சலன மேகங்களை உருவாக்கியது. அது மட்டும் இன்றி கணிசமான வளிமண்டல வேறுபாட்டுக்கு வழிவகுத்து ஈரப்பதம் நிறைந்த கிழக்கு காற்று வலுவாக உயர்ந்ததும் இந்த கனமழைக்கு காரணம் என்பது தெரிகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்கு போறீங்களா! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications