மழைக்கு முன்பே.. சென்னையில் திடீரென சுழன்று அடிக்கும் காற்று.. என்ன காரணம்? அடுத்து என்ன நடக்கும்?
சென்னை: சென்னையில் நேற்று இரவு மழை பெய்த நிலையில் தற்போது நல்ல காற்று வீசி வருகிறது. இப்படி தீவிரமாக வீசும் காற்றுக்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
நேற்று சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சென்னை ரிப்பன் மாளிகையில் வார் ரூம் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னைக்கு இன்று மஞ்சள் அலர்ட்டும்.. நாளை ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது.
காற்று ஏன்?: வங்கக்கடலில் இன்று உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி. தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணியளவில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி. தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனால் வட தமிழகத்திற்கு காற்று அதிகம் ஆகி உள்ளது. நேற்று இரவே மேக மூட்டம் உருவாகியுள்ளதால் சென்னையில் நல்ல மழை பெய்துள்ளது. தற்போது வங்கக்கடலில் இருந்து தாழ்வு மண்டலம் மையம் காரணமாக காற்று சென்னையை நோக்கி வீச தொடங்கி உள்ளது. இந்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நகர்வதால் காற்றும் சென்னையை நோக்கி நகர தொடங்கி உள்ளது. இதனால்தான் பகல் நேரத்தில் தற்போது மேக மூட்டம் அதிகமாக, அதே சமயம் குளிர்ந்த காற்றும் அதிகமாக ஏற்பட்டு உள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் சென்னையில் மழை தீவிரம் அடையும்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னை மழை பற்றி செய்துள்ள போஸ்டில், இன்று மழை பெய்ய போவது ஆரம்பம்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், இதனால் பகல் நேரத்தில் மழையில் இருந்து இடைவெளி இருக்கும். இரவு முதல் அதிகாலை வரை மழை உச்சம் அடையும். இதுதான் மழை வேகம் எடுக்கும் காலங்கள் (காற்றழுத்த தாழ்வு மண்டலம் நம்மை நெருங்கும் பகல் நேரமும் நாள் முழுவதும் மழை பெய்யக்கூடும்) இன்று இடைவேளையுடன் மழை பெய்யும், மழை பெய்தாலும் பாதுகாப்பாக அலுவலகம் செல்லலாம். சூரியன் பகலில் சிறிது சிறிதாக வரலாம், பின்னர் திடீர் மழை ஏற்படலாம், என்று கூறியுள்ளார்.
-
கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது கனமழை.. சென்னைக்கும் அலர்ட் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications