விஸ்வரூபம் எடுத்த பெரும் புயல்! அடுத்த 6 நாட்கள் இதுதான் நடக்கும்! கவனமாக இருங்க.. வல்லுனர் வார்னிங்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி எப்போது புயலாக மாறும், எங்கே செல்லும் என்று தனியார் வானிலை எக்ஸ்பர்ட் தெரிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவானகாற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தம் நிலவி வந்தது.

மேற்கு வட மேற்காக நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். தாழ்வு மண்டலமாக மாறிய பிறகு 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் டிசம்பர் 1ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் எப்படி உருவாகும் என்பதும் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. இன்று முதல் கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து, டிசம்பர் 1ம் தேதி மணிக்கு 90 கி.மீ. வேகத்தை எட்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 29ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகம் வரை சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
புயல் எந்த நாளில் எந்த நிலையை அடையும்: இந்த புயல் தொடர்பாக சென்னை ரெயின்ஸ் (https://www.chennairains.com) வானிலை அமைப்பு கணிப்பை வெளியிட்டு உள்ளது. அதில், தாய்லாந்து வளைகுடாவில் இருந்து நகர்ந்து வடக்கு தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய மலாக்கா ஜலசந்தியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதை ஐஎம்டி உறுதி செய்தது. இந்த புயல் சின்னம் எப்படி உருவாகும், அதற்கு என்ன ஆகும், எங்கே செல்லும் என்பது கிட்டத்தட்ட பூனை, எலி மோதல் போல கணிக்க முடியாமல் இங்கும் அங்கும் செல்வதாக முன்பே கணித்து இருந்தோம்.
இந்த புயல் எங்கே செல்லும் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் அது செல்ல போகும் பாதை கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வருகிறது. பெரும்பாலும் இது வங்கதேசம், வங்காளம் பக்கம் செல்லாமல் தென்னிந்திய கடல் பகுதி பக்கம் வரவே வாய்ப்புகள் உள்ளன.
சென்னை புயல்: வலிமை பெறுகிறது: ஆனால் ஒன்று உறுதி, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில நாட்களில் மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது என்று வானிலை கணிப்பு மாடல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 24- 36 மணி நேரத்தில் இது தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின் மேற்கு வடமேற்கு திசையில் செல்லும்.
டிசம்பர் 1ம் தேதி: அதன்பின் டிசம்பர் 1ம் தேதி இது புயலாக மாறும். அதன்பின் இது தீவிர புயலாக மாறி.. பின்னர் டிசம்பர் 2-3ம் தேதிகளில் அதி தீவிர புயலாக மாறும். பெரும்பாலும் இந்த சமயத்தில் புயல் நகர்ந்து நகர்ந்து டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கு கிழக்கு பகுதிக்கு வரும்.
இந்த புயல் சென்னைக்கு எவ்வளவு அருகே வருகிறது என்பதை பொறுத்தே இந்த புயல் காரணமாக சென்னையில் எவ்வளவு மழை பெய்யும் என்பது தெரியும். இந்த புயத்தால் பெரும்பாலும் தெற்கு ஆந்திர பிரதேசத்தில் காவாலி அருகே தீவிர புயலாக கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. டிசம்பர் 4ம் தேதி மாலை அல்லது இரவில் இது கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன, என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications