புயலை விட முழுவேகம்.. ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. வெள்ள நிவாரண தொகை மக்களுக்கு எப்போது கிடைக்கும்?
சென்னை: மிக்ஜாம் புயல், பெருமழை ஏற்படுத்திய கடுமையான பாதிப்புகளைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 உட்பட நிவாரணம் அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த நிவாரண தொகை எப்போது முதல் வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த அதி கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், புயல் வெள்ள பாதிப்பு தொடர்பாக கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகமாக நிலையில், தமிழக அரசு சார்பாக நிவாரண உதவி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் நிவாரணம் குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக கையிலேயே வழங்கப்பட இருக்கிறது.
நிவாரண உதவி விவரங்கள்: 1. புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
2. சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்
3. மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
4. பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள்சேதமுற்றிருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500ஆக உயர்த்தி வழங்கப்படும்.
5. மழையினால் பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410லிருந்து, ரூ.8,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
6. எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000 என்றிருந்ததை, ரூ.37,500 ஆக உயர்த்தி கொடுக்கப்படும்.
7. வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000 என்றிருந்ததை, ரூ.4,000 உயர்த்தி வழங்கப்படும்.
8. சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), ரூ.32,000லிருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக கொடுக்கப்படும்.
9. முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு இலட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும்.
10. அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து, ரூபாய் 7.50 இலட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

எப்போது நிவாரண தொகை கிடைக்கும்?: மிக்ஜாம் புயல் நிவாரண தொகை வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புயல் வெள்ள பாதிப்பால், மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நிவாரண தொகை வழங்கும் பணிகளை உடனடியாக தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம்.
அதன்படி, கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் நிவாரண தொகையை ரொக்கமாக வழங்க உள்ளது தமிழ்நாடு அரசு. ஒவ்வொரு ரேஷன் கடையிலும் நாளொன்றுக்கு 200 டோக்கன் வீதம் நிவாரண தொகை வழங்கவும், நிவாரணத் தொகை முழுவதும் கொடுத்து முடிக்கும் வரை நியாய விலை கடைகளுக்கு விடுமுறை இல்லை என்றும் கூறப்படுகிறது.
யாருக்கெல்லாம் கிடைக்காது?: சென்னையில் உள்ள அனைத்து வட்டங்களிலும், அதாவது 16 தாலுகாக்களிலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை கிடைக்கும். இதே திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தனி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை தாலுகாக்களில் வெள்ள பாதிப்பு இல்லை என்பதால் அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படாது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர், மதுராந்தகம் போன்ற பகுதிகளில் பாதிப்பு இல்லை என்பதால் இப்பகுதி மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பில்லை.. செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications