அதிதீவிரமாக மாறிய டானா புயலுக்கு 'கண்' பகுதி கிடையாதாமே! நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்பு.. ஹை அலர்ட்
சென்னை: அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள டானா புயல் ஒடிசா கடற்கரையை நெருங்கியுள்ளது. இந்த புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டானா புயலுக்கு கண் பகுதி கிடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு: தமிழ்நாட்டில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள போஸ்டில், தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று முதல் நாளை வரை கொங்கு (மேற்கு), தெற்கு உள்பகுதி மற்றும் வடக்கு உள்பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி என தென் தமிழகம் அனைத்திலும் கனமழை பெய்யும்..
தற்போது வீசும் காற்றால் பெங்களூரு மீண்டும் மழைக்கான ஹாட் ஸ்பாட்டில் உள்ளது. இன்னும் ஒரு நாள் கண்டிப்பாக மழை பெய்யும். அதன்பின் அக்டோபர் 25 முதல் பெங்களூர் மழைக்கு நீண்ட இடைவேளை விடப்படும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
புயல் எங்கே உள்ளது: டானா புயல் தற்போது வேகமாக வலிமை அடைந்து வருகிறது. தற்போது அதி தீவிர புயலாக உருவாகி உள்ள டானா இன்று மாலைக்குள் மேலும் வலிமை அடையும். மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி உள்ளது. தற்போது சென்னையில் இருந்து 1550 கிலோ மீட்டர் தூரத்திற்கு போர்ட் பிளேயருக்கு வடக்கே உள்ளது.
மேற்கு வங்கத்தில் இருந்து தெற்கில் 240 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தாழ்வு மண்டலம் உள்ளது.மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் இரண்டு நாட்களுக்கு முன் காலை (அக்.21) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நேற்று காலை இது புயலாக மாறியது. பலத்த சேதத்தை டானா புயல் ஏற்படுத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டிற்கு லேசான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.
காற்று மோசமாகும்: இந்த புயல் காரணமாக காற்று மிக வேகமாக வீசும். கரையை கடக்கும் போது 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு இடையே காற்று வேகம் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இன்று காலை (அக்.22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதையடுத்து நாளை மத்திய கிழக்கு வங்கக் கடலில் புயலாக மாறி ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள டானா புயல் ஒடிசா கடற்கரையை நெருங்கியுள்ளது. இந்த புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வங்க கடல் பகுதிகளில் வடமேற்கு பகுதியில் டான புயல் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று வானிலை அதிகாரிகள் கூறினர். அதே சமயத்தில் இந்த புயலுக்கு கண் பகுதி கிடையாது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலின் கண்பகுதி என்பது அதன் மையத்திலிருக்கும் மிதமான காற்றழுத்தப் பகுதி. அதிக வலுக்கொண்ட புயலின் மையப்பகுதி அடர்ந்த வட்ட வடிவில் தோற்றமளிப்பதால் அது புயலின் கண் எனப்படுகிறது. ஆனால் இன்று கரையை கடக்கும் டானா புயலுக்கு கண் பகுதி இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக நிவர் உள்ளிட்ட புயல்கள் இப்படி கண் பகுதி இல்லாமல் கரையை கடந்து இருக்கின்றன.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications