Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை தொடங்கி இரவு வரையிலும், இன்று காலையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் வடமாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ள காரணத்தால், தமிழக கடலோர மாவட்டங்கள், இலங்கை கடற்கரை பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. அதன்படியே சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

weather tamil nadu rain imd

நாகை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே மழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது. தஞ்சை மாவட்டத்திலும் நேற்று காலை முதல் மழை பெய்தது. காலை 7 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது அதன் பின்னர் அவ்வப்போது விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழையும் தொடர்ந்து காலை முதல் மிதமான மழையும் பெய்தது.

இதேபோல கடலூரிலும் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 9 மணிக்கு மேல் படிப்படியாகபலத்த காற்றுடன் மழை பெய்தது. பகலில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இரவில் சிறிய சாரல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. விடியற்காலையில் கனமழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கரையேராம் மன்னார் வளைகுடா-பாக் நீர் இணைப்பு பகுதிகளிலேயே நின்றுவிடும் என்றும், அதே இடத்தில் வலு இழந்து போவதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் கூறுகையில், காவிரி டெல்டா மற்றும் வடமாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்யக் கூடும்.

இதன் தொடர்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வடமாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

மிக கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கனமழை பெய்யும் இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் நிர்வாக ரீதியாக விடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+