அருவி போல.. நிரம்பி வழியும் சாலை! பாதி மூழ்கிய பெங்களூரின் பெரிய ஐடி பார்க்! பின்னணியில் ஷாக் காரணம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சென்னை கனமழைக்கு இடையே வெள்ளத்தில் இருந்து தப்பித்துள்ள நிலையில், பெங்களூரில் கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி அலுவலக இடங்களில் ஒன்றான மன்யாதா டெக் பூங்காவும் இடைவிடாது பெய்த மழையால் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய தொழில்நுட்ப பூங்காவில் உள்ள பல தொழிற்சாலைகள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வாய்ப்பு கொடுத்துள்ளன. இரவு பணிகளை செய்தவர்கள்.. தங்கள் அலுவலகங்களிலேயே தங்குமாறும் கூறப்பட்டு உள்ளது.

tamilnadu weatherman summer weather news

தொழில்நுட்ப பூங்காவிற்குள்ளும் வெளியேயும் தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகள் வெளியேற்றும்படி நிறுவனங்கள் அரசுக்கு அறிவுறுத்தி உள்ளன. வெள்ளத்தில் மூழ்கிய தொழில்நுட்ப பூங்காவின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

முதல் காணொளியில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கார்கள் சாலையில் சிக்கியிருப்பது தெளிவாக தெரிகிறது.. சுவரில் இருந்து கீழே பாய்ந்தோடும் நீர் அருவி போல் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பைக்குகள், கார்கள் மாட்டி சிக்கி தவிக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் செல்ல முயற்சிக்கும் கார்களின் காட்சிகள் இதில் பதிவாகி உள்ளன;.

நெட்டிசன்கள் இதை இணையத்தில் கலாய்த்து உள்ளனர். அவர் மன்யாதா தொழில்நுட்ப பூங்காவை "மன்யாதா டெக் நீர்வீழ்ச்சி" என்று பெயரிட்டு கிண்டல் செய்துள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் மழையால் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மன்யாதா டெக் பூங்காவைத் தவிர, கெத்தலஹள்ளி ரயில்வே அண்டர்பிரிட்ஜ் மற்றும் ஆர்ஜிஏ டெக் பார்க் சந்திப்பிலும் வெள்ளம் ஏற்பட்டு அந்த காட்சிகள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன.

பெங்களூருவில் இன்னும் ஒரு வாரத்திற்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. அக்டோபர் 14 மற்றும் 17 க்கு இடையில், மிதமான முதல் கனமழை வரை IMD கணித்துள்ளது.

மன்யாதா பார்க் இருக்கும் இடம்.. பொதுவாக ஏரி இருந்த இடம். சில சிறு ஏரிகளையும் அதன் அருகாமை நிலங்களையும்தான் இப்படி மாற்றி உள்ளனர். இதைத்தான் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அங்கே வெள்ளம் ஏற்பட காரணம்.. தண்ணீர் அதன் வழியை தேடி வந்ததே காரணம் என்று கூறப்படுகிறது.

தப்பித்த சென்னை: ஆனால் இன்னொரு பக்கம் சென்னைக்கு வந்த பிரச்சனை பாதியில் வெளியேறி உள்ளது. இதற்கு காரணம்.. காற்றழுத்த தாழ்வு மையம் கிழக்கு பக்கமாக புதுச்சேரியில் இருந்தது. அங்கிருந்து வட மேற்கு திசையில் நகர தொடங்கி உள்ளது. 10 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர தொடங்கி உள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இது தொடர்ந்து வடக்கு திசையில் நகரும். இப்படி நகர நகர.. மேகங்கள் ஆந்திர பிரதேசம் நோக்கி நகரும். ஆந்திர பிரதேசம் நோக்கி மேகங்கள் செல்லும் பட்சத்தில் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+