சென்னைக்கு அருகிலேயே நிற்க போகும் "தாழ்வு மண்டலம்".. ரெட் அலர்ட் தரப்பட்டது ஏன்? என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை நோக்கி மழை மேகங்கள் வர தொடங்கி உள்ளன. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

weather tamilnadu weatherman summer weather news

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னைக்கு இன்று மஞ்சள் அலர்டும்.. நாளை ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது.

நாளை சிவப்பு அலர்ட்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு

நாளை மஞ்சள் அலர்ட் தரப்பட்ட மாவட்டங்கள்: பெரம்பலூர், சேலம், தருமபுரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் , அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகபட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

நாளை ஆரஞ்ச் அலர்ட் தரப்பட்ட மாவட்டங்கள்: ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

ஏன் அலர்ட்: அதெல்லாம் சரி.. சென்னைக்கு ஏன் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்று இங்கே பார்க்கலாம்.

இன்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. வளிமண்டல சுழற்சி.. தாழ்வு பகுதியாக மாற உள்ளது. இந்த தாழ்வு பகுதி.. நாளை தாழ்வு மண்டலமாக மாறும். இந்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகிலேயே நிலைகொள்ள இருக்கிறது.

அதாவது பொதுவாக தாழ்வு மண்டலங்கள்.. நிலத்தை நோக்கி நகரும். ஆனால் சில தாழ்வு மண்டலங்கள் மிக மெதுவாக நகரும். சில தாழ்வு மண்டலம் அப்படியே நின்று கூட விளையாடும். கடந்த வருடம் வீசிய புயலுக்கு முன்பாக இதேபோல் தாழ்வு மண்டலம் நின்று விளையாடியது.

கடலோரம் நிற்கும் தாழ்வு மண்டலம் அலைகளை அதிகரிக்கும். இதனால் மழை நீர் கடலுக்கு போகாமல் திரும்பி செல்லும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த வருடம் இப்படித்தான் நடந்தது. மழை நீர் கடலுக்குள் செல்லாமல்.. அப்படியே.. மீண்டும் வெளியே வரும். அதேபோல் இந்த முறையும் நடக்க வாய்ப்புள்ளது. இதனால்தான் தற்போது சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த முறை சென்னைக்கு அருகிலேயே இந்த மண்டலம் நிலை கொண்டு நிற்கும். ஆனால் எவ்வளவு நேரம் நிற்கும்.. எவ்வளவு மழையை கொடுக்கும் என்று தெரியாது.

16ம் தேதி மட்டுமன்றி சென்னையில் 3 நாட்களில் 47 செ.மீ. மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது சென்னையில் 3 நாட்களில் 470 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக 24 மணி நேரத்தில் 20 செமீ மழை பெய்தால் வெள்ளம் ஏற்படும். இப்போது மூன்று நாட்களில் 47 செமீ வரை பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+