மீண்டும் அதே ரூட் எடுக்குதே! 90பி காற்றழுத்த தாழ்வு மையம்.. வடதமிழ்நாட்டை குறி வைப்பது ஏன்? காரணம்!
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மழை தீவிரம் அடைந்து உள்ளது. இந்த கனமழை வடதமிழ்நாட்டை குறி வைக்க முக்கியமான சில காரணங்கள் உள்ளன. கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று பல மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், அரியலூர், ராணிப்பேட்டை, கரூர், வேலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், திருநெல்வேலி (5ம் வகுப்பு வரை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: திருவண்ணாமலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் வானிலை முன்னறிவிப்பு;
இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில்
பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது வடகடலோர இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதன் காரணமாகவே 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை தம்மார், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வடதமிழ்நாடு ஏன்?; சென்னைக்கு அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் மெதுவாக நகர தொடங்கி உள்ளது. இந்த தாழ்வு மையம் சென்னையில் இருந்து எங்கே உள்ளது என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இவை சென்னையில் இருந்து 450 கிமீ தூரத்திற்கு அதிகமான தூரத்தில் உள்ளது. இது 90 B என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது இலங்கையை நோக்கி கிழக்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதற்கான புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில் தாழ்வு மையம் வடதமிழ்நாட்டை நோக்கி நகர தொடங்கி உள்ளது. இதன் காரணமாக வடதமிழ்நாட்டிற்கு மேலே அதிக அளவில் மழை மேகங்கள் கூடி நிற்கின்றன. வங்கக்கடலில் நிலைகொண்டு உள்ள தாழ்வு மையம் தமிழ்நாடு நோக்கி நகர்வதன் காரணமாக சென்னையில் மற்றும் வடதமிழ்நாட்டில் கனமழைக்கான சாதகமான சூழல்கள் ஏற்பட்டு உள்ளன.
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு - இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பு இல்லை. ஆனால் இதன் காரணமாகவே கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. இது மெதுவாக நகர்வது, வடதமிழ்நாட்டை நோக்கி நகர்வது போன்ற காரணங்களால் வடதமிழ்நாட்டில் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications