Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த புயல் காலத்திலும் இல்லாத வித்தியாசம்.. "விஐபிகள்" வசிக்கும் மயிலாப்பூர் தவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தின் போது கூட மயிலாப்பூரில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஒரே நாளில் மின் விநியோகம் சீராக வழங்கப்பட்டது. இப்போது மழை நின்று 3 நாட்களை கடந்த பின்னரும் 80 சதவிகிதம் பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மயிலாப்பூர்வாசிகள் கலக்கமடைந்துள்ளனர்.

சென்னை மாநகரத்தின் மிக முக்கியமான பகுதியாக உள்ளது மயிலாப்பூர். அரசியல் பிரபலங்கள், திரை உலக பிரபலங்களும் வசித்து வருகின்றனர். ஆலயங்கள் அதிகம் நிறைந்த பகுதி. எப்போதும் ஏதாவது ஒரு கோவிலில் திருவிழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.

 Why Mylapore area demanding water removal and restoration of power supply for the first time during flood?

பாஜக சீனியர் சுப்ரமணியசுவாமி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, நடிகை கீர்த்தி பாண்டியன் உள்பட பல விஐபிக்கள் வசிக்கும் பகுதி மயிலாப்பூர். முதல்வர், அமைச்சர்கள் செல்லும் காமராஜர் சாலை, டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. அருகிலேயே ஆழ்வார்பேட்டை, சிஐடி காலனி உள்ளிட்ட பகுதிகளும் உள்ளதால் விஐபி ஏரியாவாக திகழ்கிறது மயிலாப்பூர்.
சென்னையில் ஞாயிறுக்கிழமை இரவு தொடங்கி திங்கட்கிழமை இரவு வரை பெய்த பேய் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது. பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதன் சுவடு கூட தெரியாத மயிலாப்பூரில் இந்த ஆண்டு வெள்ளம் தேங்கியது. வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளது. இது கள நிலவரம். இதைத்தாண்டி இதே கருத்தை பலரும் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டும் வருகிறார்கள்.

ஞாயிறுக்கிழமை இரவு நிறுத்தப்பட்ட மின்சாரம் பல பகுதிகளில் இன்னமும் தரப்படவில்லை. மழை நின்று நான்கு நாட்கள் ஆன பின்னரும் மயிலாப்பூரில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படாத காரணத்தால் மக்கள் கொதிப்படைந்தனர். மின்சாரம் வழங்க வலியுறுத்தி ஏராளமானோர் மயிலாப்பூரில் கைகளில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஐபி சாலையான ராதாகிருஷ்ணன் சாலையில் எப்போதுமே தண்ணீர் தேங்காது. காரணம் ஜெயலலிதா, கருணாநிதி என முன்னாள் முதல்வர்கள் பலரும் தலைமைச் செயலகம் செல்வதற்கு இந்த சாலையைத்தான் பயன்படுத்துவார்கள். எப்போதும் பளிச்சென்று இருக்கும் இந்த சாலை. இந்த ஆண்டு பெய்த மழையால் 3 நாட்கள் வெள்ளம் தேங்கியது. படகு கூட இந்த சாலையில் ஓடியது.

50 மணி நேரமாக மின்சாரம் இன்றி தவிப்பதாகவும் வெள்ளத்தில் தத்தளிப்பதாகவும் ஒருவர் கூட வந்து உதவி செய்யவில்லை என்றும் ட்விட்டரில் குமுறலை வெளிப்படுத்தினர் மயிலாப்பூர் மக்கள். ராதாகிருஷ்ணன் சாலை, சிஐடி காலனி என பல பகுதிகளில் இருந்து வரும் வெள்ள நீர் இங்குள்ள கால்வாயில் வடிந்து கடலில் போய் கலக்கும். இந்த ஆண்டு கால்வாய்கள் தூர்ந்து போய் வெள்ள நீர் தேங்குவதற்கு காரணமாகி விட்டது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

லஸ் கார்னர் பகுதியில் கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் குதித்தனர் பொதுமக்கள். ராதாகிருஷ்ணன் சாலை தண்ணீர் தேங்கியதால் 3 நாட்களாக மின்சாரம் தர மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். விஐபி பகுதியாக இருக்கும் மயிலாப்பூரில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எந்த பிரச்சினையும் வராது. 2015ஆம் ஆண்டு மழை வெள்ளத்தின் போதும், வர்தா புயலின் போதும் ஒரே நாளில் தண்ணீர் வற்றி விடும். மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டு விடும். தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் கால்வாய்கள் அனைத்தும் தூர்ந்து போய் தண்ணீர் தேங்க காரணமாகி விட்டது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

குடிநீர் கிடைக்கவில்லை, பால் சப்ளை இல்லை, மின்சாரமும் இல்லை என்று குற்றம் சாட்டும் மயிலாப்பூர் பொதுமக்கள், போர் தண்ணீர் போட முடியாமல் 3 நாட்கள் பாத்ரூம் கூட போக முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக தெரிவித்துள்ளனர். மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே கடைகளில் வியாபாரம் மேற்கொண்டுள்ளனர். மின்சாரம் இல்லாமல் கோவில்களில் சரியாக அபிஷேகம் கூட செய்ய முடியவில்லை என்றும் புகார் கூறியுள்ளனர்.

மின்சாரம் இல்லாத காரணத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த ஆண்டு போல எந்த ஆண்டும் இப்படி ஒரு சிரமத்தை அனுபவித்ததில்லை என்று கூறும் பொதுமக்கள் மிக்ஜாம் புயல் மழை வெள்ளம் மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளனர். கரண்ட் எப்போது வரும்? எங்களின் கவலை எப்போது தீரும் என்பது மயிலாப்பூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேநேரம், மயிலாப்பூர் மக்கள் இப்போதுதான் முதல் முறையாக பிற ஏரியா மக்கள் படும் கஷ்டத்தை உணர்ந்துள்ளனர் என்று சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது. ஏரியா வாரியாக மக்களை பார்க்காமல் வட சென்னை முதல் விஐபிகள் வாழும் மயிலாப்பூர் வரை எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+