ஆகஸ்ட், செப்டம்பரில் மழைப்பொழிவு இயல்பைவிட அதிகரிக்கும்.. இப்பவே 2% அதிகம்: இந்திய வானிலை மையம்
டெல்லி: இந்த மாதம் ஆகஸ்ட், மற்றும் அடுத்த செப்டம்பர் மாதங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை நல்ல மழை பெய்து வருகிறது.. வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரை நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையமும் தெரிவித்திருக்கிறது.

எச்சரிக்கை: ஆனால், கேரளாவில் நிலைமை மோசமாக இருக்கிறது.. எனினும், பல இடங்களில் வரும் 5-ம் தேதி வரை கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...
முக்கியமாக, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் அலர்ட்: அதேபோல, ஒடிசாவுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. ஒடிசாவில் நேற்று முதல் இன்று வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.. குறிப்பாக அங்குல், கட்டாக், சோனேபூர், சம்பல்பூர் உட்பட சில மாவட்டங்களில் 7 முதல் 20 செ.மீ மழை பெய்யலாம் என அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருதுன்ஜெய் மொகபத்ரா செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தார்.. அந்த பேட்டியில் அவர் சொல்லும்போது, "நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழைப்பொழிவு நீண்டகால சராசரி அளவான 422.8 மி.மீ-ல் 106 சதவீதம்இருக்கும். கடந்த ஜூன் 1ம் தேதி முதல் இப்போதுவரை கிட்டத்தட்ட 453.8 மி.மீமழை பதிவாகியுள்ளது... இது வழக்கமான அளவைவிட 2% அதிகமாகும்.
அதிக மழை: அதேபோல, இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் மழைப்பொழிவு இயல்பாகவும், சில இடங்களில் இயல்பைவிட அதிகமாகவும் இருக்கும்... வடகிழக்கு, அதையொட்டியுள்ள கிழக்குப் பகுதி, லடாக், சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதி, மத்தியில் சில பகுதிகளில் மழைப் பொழிவு இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும்.
கடந்த ஜூலையில், நாட்டின் மழைப்பொழிவு இயல்பைவிட 9 சதவீதம் அதிகமாக இருந்தது.. மத்தியப் பகுதியில் மழை 33 சதவீதம் கூடுதலாக பெய்திருக்கிறது.. பருவமழையை மட்டுமே நம்பியிருக்கும் மத்திய பகுதியிலும் நல்ல மழை பெய்துள்ளது.
மழைப்பொழிவு: கிழக்கு உத்தர பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட், மேற்குவங்கத்தின் கங்கை ஆற்றுப்பகுதிகள், வடகிழக்கு பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக உள்ளது. அதேபோல, ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு 35 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை குறைவாக உள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications