அன்புமணியின் 3-வது நாள் நடைபயணம்: தருமபுரி–காவிரி உபரிநீர் திட்டம் என்றால் என்ன? என்னதான் பயன்?
சென்னை: பாமக தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் கையிலெடுத்துள்ள தருமபுரி காவிரி உபரி நீர் திட்டமானது அம்மாவட்டத்தின் தலையெழுத்தையே தலைகீழாக மாற்றும் என்கிறார் பசுமைத் தாயகத்தின் மாநில செயலாளர் இரா. அருள்.
தருமபுரி- காவிரி உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி அன்புமணி ராமதாஸ், கடந்த வெள்ளிக்கிழமையன்று 3 நாட்கள் நடைபயணத்தைத் தொடங்கினார். இன்று 3-வது நாளாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

தருமபுரி- காவிரி உபரி நீர் திட்டம் என்றால் என்ன? இதனை எப்படி செயல்படுத்துவது என்பது தொடர்பாக பசுமைத் தாயகத்தின் மாநில செயலாளர் இரா. அருள் கூறியுள்ளதாவது: பருவமழைக் காலங்களில் காவிரி ஆற்றில் உபரியாக செல்லும் வெள்ள நீரில்ஒருபகுதிநீரை குழாய்கள் மூலம் மேலேற்றிதருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பி, பாசனத்துக்கும் குடிநீருக்கும் பயன்படுத்துவது தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம் ஆகும்.
காவிரி ஆற்று வடிநிலம் மற்றும் தென் பெண்ணையாறு வடிநிலப்பரப்பில் தருமபுரி மாவட்டம் அமைந்திருக்கிறது.இரு எல்லைகளிலும் இரண்டு பெரிய ஆறுகள் ஓடினாலும்,தண்ணீர் இன்றி வறண்ட பகுதியாகவே தருமபுரி மாவட்டம் நீடிக்கிறது.காவிரி ஆற்றை விட தருமபுரி மாவட்டம் மேடான பகுதியாக இருப்பதால் குடிநீருக்கும் வேளாண்மைக்கும் போதுமான அளவுதண்ணீர் கிடைக்கவில்லை. பொருளாதார முன்னேற்றம் இல்லாததாலும் வருமானம் இல்லாததாலும் தருமபுரி மாவட்ட இளைஞர்கள் வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் பிழைக்கப் போகும் நிலை உள்ளது. நிலத்தடிநீரில் புளோரைட் கலந்துள்ளதால் தருமபுரி மக்களின் உடல்நலனும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கல்கள் அனைத்துக்கும் தீர்வாக 'தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம் Dharmapuri - Cauvery Surplus Water Scheme (DCSWS)'அமையும்.இந்த தொலைநோக்குத் திட்டம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களால் முன்வைக்கப்பட்டது ஆகும்.
வீணாகும் காவிரி உபரி நீரை பயன்படுத்தும் திட்டம்
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் பெரிய அளவில் பொழிகிறது. குறுகிய காலத்தில் மிக அதிக அளவு மழை பொழிவதால் அளவுக்கதிகமான தண்ணீர் ஒகேனக்கல் வழியாக தமிழ்நாட்டுக்குள் வருகிறது. இந்த தண்ணீரை மேட்டூர் நீர்த்தேக்கத்தில் தேக்கி வைக்க முடியாது. இதனால், பெருமளவு தண்ணீர் கொள்ளிடம் வழியாக வங்கக்கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் 100 டிஎம்சி அளவுக்கும் கூடுதலாகதண்ணிர் கடலுக்கு செல்கிறது.
தமிழக அளவில் மொத்த பயிரிடும் பரப்பில் 43.2% நிலம் பாசன வசதி பெற்றுள்ளது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் இது வெறும் 16% மட்டும்தான் என தருமபுரி மாவட்ட மனித மேம்பாட்டு அறிக்கை 2011குறிப்பிடுகிறது. இந்த குறைந்த பாசனமும்கூட, குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கிறது. ஆண்டின் பெரும்பாலான நாட்களுக்கு ஆறுகளும் ஓடைகளும் வறண்டு கிடக்கின்றன
இவ்வாறு,ஒருபக்கம் பருவகால மழையின் போது கடலுக்கு செல்லும் அபரிமிதமான காவிரி வெள்ளம்,மறுபக்கம் அதற்கு அருகிலேயே போதுமான தண்ணீர் இல்லாமல் வரண்டு கிடக்கும் தருமபுரி மாவட்டம் என்கிற நிலையை மாற்றும் வகையில்,ஒகேனக்கல்அருகில்மின்சார நீரேற்று நிலையம் அமைத்து, காவிரிஉபரி நீரை குழாய்கள் மூலம் மேலேற்றி,தருமபுரி மாவட்டத்தின் ஏரிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்லும்இறைவை பாசனத்திட்டமே 'தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம்' ஆகும்.
தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தின் பயன்கள்
1. வேளாண்மை செழிக்கும்; பொருளாதாரம் வளரும்

தருமபுரிமாவட்டத்தின் பெரிய ஏரிகளில் காவிரி உபரி நீரை நிரப்பினல், அதிலிருந்து துணை ஏரிகளுக்கும் குளங்களுக்கும் தண்ணிர் செல்லும். அந்த ஏரிகள் மூலம்வேளாண் நிலங்கள் பாசனம் பெறும். ஒகேனக்கல் பகுதியில் இருந்து மின்சார மோட்டார்கள் மூலம் தண்ணீரை மேலேற்றி வைக்கும் மடம் பகுதி கடல்மட்டத்திலிருந்து 528 மீட்டர் உயரத்தில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தின் பெரும்பாலான ஏரிகளும் குளங்களும் விவசாய நிலங்களும் இந்த உயரத்துக்கு கீழாக உள்ளன. எனவே, கால்வாய்கள் மற்றும் குழாய்கள் மூலம் தருமபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு காவிரி உபரி நீரை கொண்டு சேர்க்க முடியும். குறிப்பாக, பென்னாகரம், நல்லம்பள்ளி,தருமபுரி, காரிமங்கலம், மொரப்பூர்,கடத்தூர் ஒன்றியங்களில் பெரும்பாலான பகுதிகளும் பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களில் கணிசமான பகுதிகளும் இத்திட்டத்தால் பலன் பெறும்.
தருமபுரி மாவட்டத்தின் 83 பொதுப்பணித்துறை ஏரிகளில் மிகப்பெரும்பாலான ஏரிகளுக்கு காவிரி உபரி நீர் சென்று சேரும். அவற்றிலிருந்து தருமபுரி மாவட்டத்தின் 546 சிறு ஏரிகளில் பெரும்பாலானவற்றுக்கு தண்ணிர் செல்லும். தருமபுரி ஒன்றியம் 41,நல்லம்பள்ளி ஒன்றியம் 71,பென்னாகரம் ஒன்றியம் 47,அரூர் ஒன்றியம் 107,மொரப்பூர் ஒன்றியம் 97,பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் 27,காரிமங்கலம் ஒன்றியம் 102,பாலக்கோடு ஒன்றியம் 54 எனும் எண்ணிக்கையில் சிறு ஏரிகள் (Minor Tanks)உள்ளன (புதிதாக பிரிக்கப்பட்ட கடத்தூர், ஏரியூர் ஒன்றியங்களும் இதில் அடங்கும்). இவற்றுள் மிகப்பெரும்பாலானநீர்நிலைகள் தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தால் பெரும்பயனடையும். ஆகமொத்தத்தில் ஒட்டுமொத்த தருமபுரி மாவட்டமும் இத்திட்டத்தால் பயனடையும்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணை, கேசரகுழிபள்ளம் அணை, சின்னாறு அணை, தும்பலஅள்ளி அணை, தொப்பையாறு அணை, நாகாவதி அணை, பஞ்சப்பள்ளி அணை, வரட்டாறு அணை, வள்ளிமதுரை அணை, வாணியாறு அணை ஆகிய 10 அணைகளுள் கணிசமான அணைகளுக்கு 'தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தால்' பலன் கிடைக்கும்.
நெல், சிறுதானியங்கள், பருப்புவகைகள், நிலக்கடலை,பருத்தி விளையும் பகுதியாக தருமபுரி மாவட்டம் உள்ளது.மாம்பழம், வாழை, திராட்சை, புளி உள்ளிட்டவை இம்மாவட்டத்தில் விளைகின்றன. தக்காளி, மிளகாய் உள்ளிட்ட ஏராளமான காய்கறி வகைகள் விளையும் மாவட்டமாக உள்ளது.மலர் சாகுபடியும் நடக்கிறது. ஆடு வளர்ப்பும் பட்டுப்பூழு வளர்ப்பும் கணிசமாக உள்ளது. தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் இவை அனைத்தும் பன்மடங்கு செழிப்படையும்.
2.வேலைவாய்ப்பு பெருகும்;ஏழ்மை ஒழியும்,

தருமபுரி மாவட்டம் மிகப்பெருமளவு விவசாயத்தைசார்ந்துள்ள மாவட்டம் ஆகும். இங்குள்ள மக்களில் 70% பேர் விவசாயம் சார்ந்து வேலைவாய்ப்பை பெறுகின்றனர்
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தருமபுரி மாவட்டத்தில்விவசாயம் செய்வோர்2,01,328பேர்,விவசாயத் தொழிலாளர்கள்,2,67,345பேர்.இந்தபிரிவினரின் மொத்த எண்ணிக்கை 4,68,673 ஆகும். இதுமொத்தவேலைசெய்யத்தகுதியானோரில்66% ஆகும். குடும்பத்தொழில் செய்வோர்11,308பேர், இதர பணிகளில் உள்ளோர் 2,33,546பேர். இந்த 2 பிரிவினரின் மொத்த எண்ணிக்கை 2,44,854. இதுமொத்தவேலைசெய்யத் தகுதியானோரில்34% ஆகும்.
முதல் 2 பிரிவுகளில் உள்ள 66%தொழிலாளர்கள்பெரிதும் வேளாண்மை சார்ந்தவர்கள் ஆகும். மற்ற 2 பிரிவுகளில் உள்ள 34%தொழிலாளர்கள் வேளாண்மை சாராத வேலைகள் மூலம் வருமானம் பெறக்கூடியவர்கள் ஆகும்.
அதே நேரத்தில் 2011-12 கணக்கீட்டின்படி, தருமபுரி மாவட்டத்தின் மொத்த உற்பத்தியில் வெறும் 16% இடத்தை வேளாண்மை பிடித்துள்ளது. உற்பத்தித்துறை 20% இடத்தையும், சேவைத்துறை 64% இடத்தையும் பிடித்துள்ளன. இதன்படி சுமார் 66% மக்கள் சார்ந்துள்ள வேளாண்மையின் பொருளாதார பங்களிப்பு 16% ஆகவும், சுமார் 34% மக்கள் சார்ந்துள்ள வேளாண்மை அல்லாத தொழில்களின் பங்களிப்பு 84% ஆகவும் உள்ளது. இதன் உண்மையான விளைவு'விவசாயம் சார்ந்த மக்களுக்கு மிக மிகக் குறைவான வருமானமே கிடைக்கிறது' என்பதுதான்.
தருமபுரிமாவட்டத்தின்வறுமையும்பின்தள்ளப்பட்டநிலைமையும்பெருமளவுவிவசாயத்தை சார்ந்தே உள்ளது. தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டமானதுவிவசாயிகளுக்கும்விவசாயத்தொழிலாளார்களுக்கும்வருமானத்தைஅதிகமாக்கும்என்பதால்தருமபுரி மாவட்டத்தின் வறுமை நிலையையும் பின்தங்கிய நிலையையும் அகற்றுவதில் மிக முக்கிய பங்குவகிக்கும்.
3.வேலைக்காக புலம்பெயரும் அவலம் தீரும்
மிக அதிகமான மக்கள் உள்நாட்டு அகதிகளாக வெளியூர்களுக்கு வேலை தேடி ஓடும் நிலை (distress migration)தருமபுரி மாவட்டத்தில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் வேறு வழியே இன்றி வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் சென்றுள்ளனர்.இவ்வாறு வேலைதேடி செல்வோர் அதிக திறன்மிக்க தொழிலாளர்களாக இல்லாததால் அவர்களுக்கு பெரிய அளவிலான வருமானமும் இல்லை. 2011 மாவட்ட மனிதமேம்பாட்டு அறிக்கையின் படி தருமபுரி மாவட்டத்தில் 44% பள்ளிக் குழந்தைகள் பெற்றோருடன் இல்லாமல் நண்பர்கள், உறவினர்கள், விடுதிகளில் வசித்தனர். உழைக்கும் வயதினர் தமது குழந்தைகளையும் முதியோரையும் தனியே விட்டுவிட்டு பிழைப்புத் தேடி வெளியூர்களுக்கு செல்வதே இதற்கான காரணம் ஆகும். குழந்தைகளின் கல்வி, உடல்நலம், எதிர்காலம் என எல்லாமும் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகிறது.வேளாண்மையால் வருமானம் இல்லை என்பதே இம்மாவட்டத்தின் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு காரணமாக உள்ளது. இவ்வாறு,ஏராளமானோர்சொற்ப கூலிக்காக குடும்பத்தை விட்டு பிரிந்துகடுமையான வேலைகளுக்குசெல்லும்அவலநிலைக்குதருமபுரி-காவிரி உபரி நீர் திட்டம் தீர்வாக அமையும்.
4.குடிநீர்பற்றாக்குறைதீரும்
தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தினால்,விவசாயம் மட்டுமின்றி நிலத்தடி நீர்வளம் அதிகரிப்பதால் இப்பகுதி முழுவதும் பயனடையும். குடிநீர் பற்றாக்குறையும் தீரும். இதனால் தருமபுரிநகரமும்,அரூர், கடத்தூர், காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், கம்பைநல்லூர், பி. மல்லாபுரம் பேரூராட்சிகளும் பயனடையும்.
5.புளோரைட் பாதிப்பிற்கு ஒரு தீர்வாகும்
தருமபுரி மாவட்டத்தில் புளோரைட் பாதிப்பு ஒரு முதன்மை பிரச்சினையாக உள்ளது. மாவட்டத்தின் நிலப்பரப்பில் பாதி அளவுக்கும் மேலான பகுதிகளில் புளோரைட் பாதிப்பு உள்ளது. பற்களை அதிகம் தாக்கும் நோயாகவும், எலும்புகளை பாதிப்பதாகவும், மூட்டுவலி, தசைவலி பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புளோரசிஸ் தாக்கம் உள்ளது. தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தினால் நிலத்தடி நீர்வளம் மேம்பாடடைவதாலும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதாலும், புளோரைட் தாக்கம் குறையும். இதனால் தருமபுரி மக்களின் உடல்நலனும் காப்பாற்றப்படும்.
6. சமூக நல்லிணக்கத்துக்கும் அமைதிக்கும் வழிவகுக்கும்
வன்முறை, அமைதியின்மை, வெறுப்பு பிரச்சாரம், சமூக முரண்பாடுகள் போன்றவற்றுக்கு வேலையில்லாத் திண்டாட்டமும் பொருளாதார பின்தங்கிய நிலையும் ஒரு தூண்டுகோலாக உள்ளது. தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தினால் அனைத்து பிரிவு மக்களுக்கும் முன்னேற்றம் ஏற்படும் என்பதால், மக்கள் பிரிவுகளுக்கிடையேயான சமூக அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான நற்சூழல் உருவாகும்.
சந்தேகங்களும், அவற்றுக்கான பதில்களும்
1.காவிரியில் இருந்து மிக அதிக தண்ணிர் எடுக்க வேண்டுமா?
இல்லை. குறைந்த அளவு தண்ணீர் எடுப்பது போதுமானது. ஆண்டுக்கு 3 டிஎம்சி அளவுக்கு எடுத்தால் பொதும் என்று கூறப்படுகிறது.
2.ஆண்டுமுழுவதும் எடுக்க வேண்டுமா?
இல்லை. தென்மேற்கு பருவமழைக் காலத்தில், காவிரி கரைபுரண்டு ஓடும்போது மட்டும் ஒரு சில நாட்களுக்கு தண்ணீர் எடுத்தால் போதுமானது.அதாவது, எப்போதெல்லாம் பெருவெள்ளம் கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டு,காவிரிநீர் கடலுக்கு செல்ல நேர்கிறதோ, அந்த சூழலில் மட்டும் தருமபுரி மாவட்டத்துக்கு நீரேற்றம் செய்வது போதுமானது ஆகும்.
3.காவிரி நதி நீர் பங்கீட்டிற்கு இந்த திட்டம் எதிரானதா?
இல்லை. கர்நாடகத்திடமிருந்து கூடுதல் நீர் எதையும் இத்திட்டத்திற்காக கோரவில்லை. ஏற்கெனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டுக்கான நீர் ஒதுக்கீட்டு அளவு இறுதி செய்யப்பட்டுவிட்டதால், இத்திட்டம் எந்தவொரு புதிய கோரிக்கையையும் உருவாக்காது.காவிரி நீரில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கினை வீணடிக்காமல் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாக இத்திட்டம் அமையும். எனவே,காவிரி நதி நீர் பங்கீடுகுறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக இத்திட்டம் அமையாது.

4.காவிரி டெல்டா பாசனப்பகுதி பாதிக்குமா?
ஒருபோதும் பாதிக்காது. தென் மேற்கு பருவமழைக் காலத்தில் காவிரியில் உருவாகும் வெள்ளம் காவிரி பாசனப்பரப்பின் தேவையை விட பலமடங்கு அதிகமாக இருப்பதால், அவ்வளவு நீரும் கொள்ளிடம் வழியே வங்கக்கடலுக்கு அனுப்பப்படுகிறது. சுமார் 100 டிஎம்சி தண்ணீருக்கும் மேல் கொள்ளிடத்தில் செல்கிறது. இதனால், கொள்ளிட ஆற்றுப்பகுதிகளில் ஆண்டுதோரும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இவ்வாறாக, வீணாக செல்லும் தண்ணீரில் மிகச்சிறிய அளவுநீரைமட்டும், வெள்ளப்பெருக்கு காலத்தில் மட்டும் எடுப்பதால் - காவிரி டெல்டா பாசனத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
5.நீதிமன்ற வழக்குகள் இத்திட்டத்திற்கு தடையாகுமா?
இல்லை. தடையாகாது. தமிழ்நாட்டின் நீர்நிலைகள்,நீர்த்தேக்கங்கள், நீரேற்றத் திட்டங்கள் குறித்தெல்லாம் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள எந்தவொரு வழக்கிலும்,தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிரான உத்தரவோ, தடையோ எதுவுமே வழங்கப்படவில்லை. இத்திட்டத்தை தடுப்பதற்கு காரணம் காட்டும் வகையிலான நீதிமன்ற உத்தரவுகள் எதுவும் இல்லை. எனவே,தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவோ, திட்டப்பணிகளை தொடங்கவோ எந்தவொரு நீதிமன்றத்தின் எந்தவொரு உத்தரவும் தடையாக இல்லை.
6.காலநிலை மாற்றம் இத்திட்டத்தை பாதிக்குமா?
இல்லை. பாதிக்காது. மாறாக, காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்க்கொள்ளும் மிகச்சிறந்த திட்டமாக இது அமையும். இனிவரும் ஆண்டுகளில், மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெருமளவு மழைப்பொழிவு ஏற்பட்டு, ஒரு சில நாட்களில் காவிரியில் பெருவெள்ளம் உருவாகும். சில வாரங்களில் மாபெரும் வெள்ளமும், பல மாதங்கள் தண்ணீர் இல்லாத நிலையும் ஏற்படும். வெள்ளப்பெருக்கு காலத்தில் கிடைக்கும் அளவுக்கதிகமான நீரை ஏரிகளிலும், குளங்களிலும் நிரப்பி பாசனத்தையும் நிலத்தடி நீர்வளத்தையும் மேம்படுத்துவதன் மூலம் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை சமாளிப்பதற்கான மிகச்சிறந்த தகவமைப்பு (Climate change adaptation)திட்டமாக இது அமையும்.

இது வழக்கத்தில் இல்லாத திட்டமும் இல்லை, சாத்தியம் இல்லாத திட்டமும் இல்லை. உலகமெங்கும் நீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளின் தேவைகளை சமாளிப்பதற்காக இத்தகைய திட்டங்கள் செயலாக்கப்படுகின்றன.
சௌராஷ்டிரா - கட்ச் திட்டம்(Saurashtra-Kutch Water Grid Project):நர்மதா ஆற்று நீரினை குஜராத்தின் சௌராஷ்டிரா - கட்ச் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் மெகா நீரேற்றுத் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது.இத்திட்டத்தில் பள்ளத்தில் இருந்து மேட்டிற்கு 66 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் நீரேற்றம் செய்யப்படுகிறது. ஒரு கார் பயணிக்கும் அளவுக்கு மிகப்பெரிய குழாய்களை 3 வழித்தடங்களில் அமைத்து மொத்தம் 361 கிலோ மீட்டர் தொலைவுக்கு தண்ணீர் கொண்டுசெல்லும் மிகப்பெரிய திட்டம் இதுவாகும்.132 நகரங்கள்,11,456 கிராமங்களில் வசிக்கும் சுமார் 4 கோடி மக்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ஒரு நாளுக்கு 1650 மில்லியன் லிட்டர் (165 கோடி லிட்டர்) குடிநீர் வழங்கும் திட்டமாக இது உள்ளது. இத்திட்டத்தின் தொடச்சியாக, விவசாயத் தேவைக்காக நீரேற்றத்தின் மூலமாக 100 நீர்த்தேக்கங்களில் தண்ணீரை தேக்கும் திட்டம் செயலாக்கப்படவுள்ளது.
காலேஸ்வரம் திட்டம்(Kaleshwaram Lift Irrigation Project):தெலுங்கானாவில் நிறைவேற்றப்பட்டுள்ள காலேஸ்வரம் நீரேற்று திட்டம் கற்பனைக்கு எட்டாத ஒரு மாபெரும் திட்டம் ஆகும். அங்கு ஒரு நாளில் 2டிஎம்சி வீதம், ஒரு ஆண்டில் 90 நாட்களில் 180 டிஎம்சி தண்ணீரை தெலுங்கானாவின் வறண்ட பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.கடல் மட்டத்திலிருந்து 92 மீட்டர் உயரத்தில் இருக்கும் கோதாவரி மெடிகடாஅணையில் உள்ள நீரை, அதிகம்பட்சமாக618 மீட்டர் உயரத்தில் உள்ள கொண்டபோச்சம்மா சாகர்அணைக்கட்டுவரை கொண்டுசெல்லும் திட்டமாக இது உள்ளது. 1832 கிலோ மீட்டருக்கு கால்வாய்கள், குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சுரங்கப்பகுதி மட்டும் 203 கிலோ மீட்டர் ஆகும். தெலுங்கானாவில் 70 விழுக்காடு பகுதிகளுக்குஇத்திட்டத்தின் மூலம் தண்ணிர் செல்லும் திட்டமாக இது உள்ளது. 13 மாவட்டங்களில்45லட்சம் ஏக்கருக்கு தண்ணீரை பயன்படுத்தக்கூடியமிகப்பெரிய திட்டம் இதுவாகும்.
இவ்வாறு,குஜராத் மாநிலத்திலும் தெலுங்கானா மாநிலத்திலும் கடந்த பத்தாண்டு காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டுள்ள இத்திட்டங்களுடன் ஒப்பிட்டால்,தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம் ஒப்பீட்டளவில் சிறியதொரு நீரேற்று திட்டம் தான். ஆந்திரம், மராட்டியம், பீகார்,ஒரிசாஉள்ளிட்ட பல மாநிலங்களில் இதுபோன்ற நீரேற்று திட்டங்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications