Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பராசக்தி படத்திற்காக விஜய் ரசிகர்களை தாக்கி பேசிய சுதா கொங்கரா.. பொளந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான பராசக்தி திரைப்படம் கடந்த ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸ் ஆனது அதற்குப் பிறகு அதிகமான விமர்சனங்களும் நெகடிவ் கருத்துகளுக்கும் உள்ளாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், படத்தை பற்றி தவறாக பேசுபவர்கள் குறித்து சுதா கொங்கரா ஆதங்கத்துடன் பேசி இருந்தார். அதை பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு வைக்கிறார்.

படத்திற்கு தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதுகுறித்து இயக்குநர் சுதா கொங்கரா ஊடகங்களுக்கு அளித்த விளக்கம் தற்போது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சில விமர்சனங்கள் திட்டமிட்ட வகையில் பரப்பப்படுவதாகவும், சமூக ஊடக விமர்சனங்கள் படத்தின் மீது தவறான மனப்பான்மையை உருவாக்குவதாகவும் அவர் கூறியிருந்தார்.

Parasakthi Sivakarthikeyan

அதிலும் விஜய் ரசிகர்களை தாக்குவது போலவே அவர் பேசியிருந்தார். அதாவது ஒரு படத்திற்கு எதிராக தெரியாத ஐடிகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு மோசமான வகையில் அவதூறு பரப்புகிறார்கள். நாம் இதை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அது எங்கிருந்து வருகிறது என்பது உங்களுக்கு தெரியும். இந்த வகையான தாக்குதல்கள் அரசியல் சார்ந்தவை அல்ல.

இது படம் வெளியிடப்படாத (பொங்கலுக்கு) நடிகரின் ரசிகர்களிடமிருந்து வருகிறது. இந்த ரவுடித்தனம் மற்றும் குண்டர் தனத்திற்கு எதிராக நாம் போராடுகிறோம் என்று விஜய் பெயரை சொல்லாமலேயே பேசியிருந்தார்.

இந்த நிலையில், ப்ளூ சட்டைமாறன் சுதா கங்காரா பேசியதே ட்ரோல் செய்து இருக்கிறார். ஏற்கனவே படம் ஓடவில்லை என்றால், பழியை தூக்கி சோசியல் மீடியாவினர் விமர்சகர்கள் மீது போடுவது தமிழ் சினிமாக்காரர்களின் வழக்கம். 'படத்தில் நாம் என்ன தவறு செய்தோம்?' என்று சுயபரிசீலனை செய்யமாட்டார்கள்."

இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற சுதா கொங்கராவின் முந்தைய படங்களை வரவேற்றது இதே தமிழ் மக்கள் தான் என்றும், அப்போது புகழ்ந்தவர்களே இப்போது விமர்சிக்கிறார்கள்.. அதனால்
"இப்போது ரசிகர்கள் கசக்கிறார்கள்" என்று கலாய்த்து இருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறனின் இந்த கருத்துக்கு பல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பராசக்தி படத்தை வேண்டும் என்று சிலர் நெகட்டிவ் ரிவ்யூ கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சுதாவிற்கு சப்போர்ட் செய்தும் வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+