ரொம்ப யோசிக்க வேண்டாம்.. நல்லதே நடக்கும்.. பராசக்தி பரபரப்புக்கு நடுவே.. சிவகார்த்திகேயன் கூல் பேச்சு
திருச்சி: விஜய்யின் ஜனநாயகன் படத்தை போன்றே பராசக்தி படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் தற்போது வரை வழங்கப்படாத நிலையில் படம் ரிலீஸ் ஆகுமா என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ரொம்ப யோசிக்க வேண்டாம்.. நல்லதே நடக்கும்.. என சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ டிரெண்ட் ஆகி வருகிறது.
பராசக்தி திரைப்படம் வரும் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், மோகன் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா நடிபில் சுதா கொங்கரா இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு இன்னமும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் ஜனநாயகன் படம் போல பராசக்தி படமும் வெளியாகுமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நல்லதே நடக்கும்.. ரொம்ப யோசிக்க வேண்டாம் என சிவகார்த்திகேயன் பேசியுள்ளது.
திருச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:- இந்த படம் என்ன பேசுகின்றது என்பது தான் ரொம்ப ரொம்ப முக்கியம். இந்த படம் பண்றதுக்கு மிக முக்கியமான காரணம் இந்த கதை உண்மை சம்பவங்களின் அடிப்படையானது. நம்ம மொழிக்காக.. நம்ம மண்ணுக்காக.. தமிழுக்காக உயிரை விட்ட நிறைய பேர் அவங்களுடைய முயற்சி என்ன? தியாகம் என்ன? என்பதை அவங்களுக்கு வணக்கம் சொல்கிறது மாதிரியான படம் தான் இந்த படம்.
இப்படிப்பட்ட கதை இருப்பதனால் தான் இவ்வளவு பெரிய நடிகர்கள் எல்லாரும் இதற்கு ஒத்துக்கொண்டனர். எல்லாரும் சேர்ந்தே ஓடுவோம், சேர்ந்தே ஜெயிப்போம்.. என்ன கவலை இருந்தாலும் ரொம்ப யோசிக்க வேண்டாம்.. நல்லதே நடக்கும்.. நல்லதே நடக்கும். நல்லதே நடக்கும்.. என்று கூறினார்.
அப்போது சிவகார்த்திகேயன், ரஜினிகாந்தின் டயலாக்கான பராசக்தி ஹீரோ டா என்ற டயலாக்கையும் பேசினார். பேரை கேட்டதும் சும்மா அதிருதுல்லா.. என்றும் ரஜினி வாய்சில் மிமிக்ரி செய்தார். இந்த நிலையில் வரும் 10 ஆம் தேதி திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகும் என டான் பிக்சர்ஸ் மீண்டும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications