சசிகலா மட்டும் கையும் களவுமாக சிக்கியிருந்தால் அவ்ளோதான்.. ரூபா ஓபன்டாக்!
சசிகலா சிறையில் இருந்து வெளியே சென்ற சமையத்தில் என்னிடம் சிக்கியிருந்தால் நான் எடுக்கும் நடவடிக்கை பயங்கரமாக இருந்திருக்கும் என்று டிஜஜி ரூபா கூறியுள்ளார்.
பெங்களூரு : சசிகலா சிறையில் இருந்து வெளியே போன சமயத்தில் கையும் களவுமாக என்னிடம் பிடிபட்டிருந்தால் நான் எடுக்கும் நடவடிக்கையே வேறு மாதிரி இருந்திருக்கும் என்று டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
சசிகலா சிறையில் இருக்கிறார், அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது, என்ன சாப்பிடுகிறார், யாரை சந்திக்கிறார் என்பதே செய்திகளாக இருந்தது. ஆனால் அதனையெல்லாம் உடைத்துப் போட்டது டிஐஜி ரூபா சொன்ன குற்றச்சாட்டு.
சசிகலாவிற்கு டிஜிபி சத்யநாராயணராவ் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் என்று கூறியிருந்தார். மேலும் சிறையில் பல்வேறு விதிமீறல்கள் அரங்கேறுவதாகவும் அவற்றிற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார்.

மர்மம் உடைக்கும் ரூபா
ஆனால் அதே சமயம் ரூபா கூறிய குற்றச்சாட்டுகளையடுத்து சிறையில் விதிமீறலுக்கான சாட்சியங்கள் அழிக்கப்பட்டதாகவும், சிசிடிவி காட்சிகளும் அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனிடையே சசிகலா பெரும்பாலான நாட்கள் சிறைக்கு வெளியே இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருத்தாகவும் செய்திகள் உலா வருகின்றன.

வெளியே சென்றது உண்மைதான்
இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்த வெளியே சென்று வந்ததில் இருக்கும் உண்மைகளை போட்டு உடைத்துள்ளார் ரூபா. சசிகலா பெரும்பாலான நாள்களில் சிறையில் இருப்பதில்லை, சிறைக்கு அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தான் தங்கியிருந்தார் என எனக்கும் தகவல் கிடைத்தது. அதனையடுத்து நான் திடீர் சோதனைகள் எல்லாம் நடத்தினேன்.

சிக்கியிருந்தால் நடவடிக்கையே வேற
ஆனால் ஒரு முறை கூட அவர் என்னுடைய கையில் சிக்கவில்லை. ஒருவேளை சசிகலா சிறையில் இல்லாமல் வெளியில் எங்காவது இருந்த போது நான் கையும், களவுமாக பிடித்திருந்தால் நான் எடுத்திருக்கும் நடவடிக்கையே வேறு மாதிரி இருந்திருக்கும், என்று ரூபா கூறியுள்ளார்.

நேர்மையான அதிகாரி vs ஊழல் அதிகாரி
என்ன செய்வது நேர்மையாக செயல்பட சில சிறை அதிகாரிகள் இருந்திருந்தாலும், வாங்கிய காசிற்கு விசுவாசம் காட்டும் சில அதிகாரிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களின் தயவால் தப்பித்த சசிகலா விதிமீறல் புகார் நிரூபனமானால் தண்டனையின் இருந்து தப்ப முடியாது என்றும் கூறப்படுகிறது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications