ஆச்சாா்யா VS ஜெ. தரப்பு.... இறுதியில் வென்றது ஜெ. தரப்பு ... இருதரப்பு வாதங்கள் ஒரு கண்ணோட்டம்
கா்நாடகா: அரசு வழக்கறிஞராக மீண்டும் பி.வி.ஆச்சாா்யா நியமிக்கப்பட்டதையடுத்து ஜெயலலிதா மேல் முறையீட்டு வழக்கில் மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டிருந்தது. அவரது வாதங்கள் வலுவானதாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது தான் இந்த பரபரப்புக்கு காரணம்.
அவரது வாதங்களை தற்போது பாா்க்கலாம்

கர்நாடக அரசு தான் முக்கிய பிரதிவாதி
கர்நாடக மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட பின் கர்நாடக அரசு தான் இதில் முக்கிய பிரதிவாதி.இந்த மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு தரப்பை இணைக்காததே தவறு.

13 கோடி ரூபாயும் ஊழல்
நமது எம்ஜிஆர் நிறுவன வைப்பு திட்டம் என்பது போலியானது.இதை கீழமை நீதிமன்றம் போலி என்று உறுதி செய்துள்ளது.இதில் கணக்கில் வராத 13 கோடி ரூபாயும் ஊழல் செய்ததே என்று கீழமை நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.

கூட்டுச்சதி
இந்த வழக்கில் ஜெயலலிதாவை தவிர்த்து வேறு யாருக்கும் வருமானம் என்பது துளி அளவு கூட இல்லை.ஆனால் சசிகலா,சுதாகரன்,இளவரசி ஆகியோர் அவர்களுக்கு பல்வேறு தொழில்களும், வருமானமும் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இது அப்பட்டமான பொய். இவர்கள் நால்வரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். இதுவே கூட்டுச்சதிக்கு ஆதாரம்.

ஊழலை மறைக்க முயற்சி
மேலும் 50க்கும் மேலான வங்கி கணக்குகளை வைத்து தங்களுக்குள் பலமுறை பணபரிமாற்றம் செய்து ஊழலை மறைக்க முயற்சித்துள்ளனர் என்பது கீழமை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்
குற்றம் சந்தேகத்திற்கிடமில்லாமல் கீழமை நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினையே உறுதிப்படுத்த வேண்டும்.

இனி ஜெயலலிதா தரப்பு வாதங்களை பாா்க்கலாம்
சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டியதற்கான காரணங்கள் என்று கூறி ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆறு முக்கிய அம்சங்களை, வாதமாக கர்நாடக உயநீதிமன்றத்தில் முன்வைத்திருந்தார்.

முறையான மதிப்பீடு இல்லை
ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகேஷ்வரராவ், சுதாகரனின் திருமண செலவுகளை முறையாக விசாரணை அதிகாரிகள் மதிப்பிடவில்லை.

கட்டட மதிப்பு அதிகாிப்பு
வழக்கில் தொடர்புடைய கட்டடங்களின் மதிப்புகள் அதிகரித்து காட்டப்பட்டுள்ளது.

தொடர்பே இல்லாத நிறுவனங்கள்
தொடர்பே இல்லாத நிறுவனங்கள் பலவற்றை ஜெயலலிதாவிற்கு சொந்தமானைவ என்று கணக்கு காட்டப்பட்டுள்ளதாக நாகேஷ்வரராவ் தெரிவித்துள்ளார்.

சந்தாதாரர்களால் வழங்கப்பட்டவை
நமது எம்.ஜி.ஆர் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள நிதி அனைத்துமே சந்தாதாரர்களால் வழங்கப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார்.

வருமான வரி செலுத்தியுள்ளாா்
சொத்துகளுக்காக ஜெயலலிதா செலுத்தியுள்ள வருமான வரியை வருமான வரித்துறை ஏற்றுக் கொண்டிருப்பதாக நாகேஷ்வரராவ் தெரிவித்துள்ளார்.
நால்வரும் ஒரே வீட்டில் இருந்தாா்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவா்கள் கூட்டுச் சதி செய்திருப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது
இவ்வாறு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞாின் வாதம் முன் வைக்கப்பட்டது.
இறுதியில் ஜெயலலிதா தரப்பு வாதத்தை ஏற்று நால்வரையும் விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டுள்ளாா்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications