Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரட்டை இலை யாருக்கு? வாதங்கள் நிறைவு.. எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையம் 'ரிசல்ட்'

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான சசிகலா, ஓபிஎஸ் அணி வாதங்கள் நிறைவடைந்துவிட்டன. தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் முடிவை அறிவிக்கலாம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து சசி மற்றும் ஓபிஎஸ் அணி வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை தேர்தல் ஆணையத்திடம் இன்று முன்வைத்தனர். இருதரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் முடிவை அறிவிக்கலாம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்த பஞ்சாயத்து இன்று தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. சசிகலா அணி சார்பாக மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன், அரிமா சுந்தரம், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

Mohan Parasaran to appear for Team Sasikala in EC

ஓபிஎஸ் அணி சார்பாக சி.எஸ். வைத்தியநாதன், குருகிருஷ்ணமூர்த்தி மற்று மனோஜ் பாண்டியன் ஆகியோர் வாதிட்டனர். இரு அணியினரும் சுமார் 4 மணிநேரம் வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இருதரப்பும் டெல்லியில் செய்தியாளர்களை சந்திததனர். ஓபிஎஸ் அணியின் மைத்ரேயன் கூறுகையில், தங்களது தரப்பில் ஆணித்தரமாக ஆழமாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன; எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என வாதிட்டார்.

Mohan Parasaran to appear for Team Sasikala in EC

அதேபோல் சசிகலா அணியின் அரிமா சுந்தரம் கூறுகையில், எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். நாளை காலையில் முடிவு தெரியவரும் எனக் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+