For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெர்மனியில் நடந்த ‘குண்டு’ பூசணிக்காய் போட்டி.... பரிசைத் தட்டிச் சென்ற 812.5 கி பூசணி!

Google Oneindia Tamil News

லுட்விக்ஸ்பர்க், ஜெர்மனி: ஜெர்மனியில் நடந்த பிரமாண்ட பூசணிக்காய்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் ராபர்ட் ஜேசர் என்பவருடைய பூசணிக்காய் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது.

இந்தப் பூசணிக்காயின் எடை 812.5 கிலோவாகும். இதுவரை நடந்த போட்டிகளிலேயே மிக அதிக எடை கொண்ட பூசணிக்காய் என்ற புதிய சாதனையையும் ஜேசரின் பூசணிக்காய் படைத்துள்ளது.

ஆண்டுதோறும் ஜெர்மனியில் நடந்து வரும் பூசணிக்காய் போட்டியாகும் இது.

லுட்விக்ஸ்பர்க் பூசணித் திருவிழா...

லுட்விக்ஸ்பர்க் பூசணித் திருவிழா...

இந்தப் போட்டி, லுட்விக்ஸ்பர்க் பூசணித் திருவிழாவின் ஒரு பகுதியாகும். இந்தத் திருவிழாவானது ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெறு்ம்

விதம் விதமான பூசணி அலங்காரம்...

விதம் விதமான பூசணி அலங்காரம்...

இந்தப் போட்டியில் எங்கு பார்த்தாலும் பூசணிக்காய்கள் தான். விதம் விதமான போட்டிகளை நடத்துகிறாரக்ள். பூசணிக்காயை வைத்து விதம் விதமாக அலங்கரிக்கிறார்கள்.

பிரமாண்ட பூசணி பொம்மைகள்...

பிரமாண்ட பூசணி பொம்மைகள்...

விலங்குகளின் உருவத்தை பூசணிக்காய்களை வைத்தே அலங்கரித்து நிறுத்தி வைத்து பிரமிக்க வைக்கிறார்கள். பூசணி சாம்பியன் போட்டி தவிர பூசணிக்காய் தொடர்பான பல்வேறு வகையான போட்டிகளும் இங்கு நடைபெறுகிறது.

அரண்மனையில் நடந்த சாமபியன் போட்டி...

அரண்மனையில் நடந்த சாமபியன் போட்டி...

லுட்விக்ஸ்பர்க் அரண்மனை வளாகத்தில் நடந்த பூசணி சாம்பியன் போட்டியில் ராட்சத பூசணிக்காயக்ள் அணிவகுத்து கலந்து கொண்டன. அதில் முதல் பரிசை தட்டிச் சென்றது ஜேசரின் பூசணிக்காய்.

English summary
Robert Jaser poses with his Atlantic Giant pumpkin at the palace in Ludwigsburg, Germany, 04 October 2015. Weighing 812.5 kilogramms, the pumpkin won the championship title as well as setting a new German record for the heaviest pumpkin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X