எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்
சென்னை: சென்னையின் இதயமான சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை இடையே வரக்கூடிய 4 வழி பாலத்தின் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த பாலத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
சென்னைவாசிகளின் நீண்ட நாள் கனவான அண்ணா சாலை உயர்மட்ட மேம்பாலப் பணியில் ஒரு முக்கியமான மைல்கல் எட்டப்பட்டிருக்கிறது. 'எப்ப முடியும்?' என ஏங்கித் தவித்த வாகன ஓட்டிகளுக்கு இதமான செய்தியாக, சைதாப்பேட்டை முதல் சி.ஐ.டி நகர் வரையிலான 1.5 கி.மீ நீளப் பகுதி தற்போது உருவம் பெற்றுள்ளது.

சுமார் 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3.2 கி.மீ தொலைவுக்கு அமையவுள்ள இந்த பிரம்மாண்ட பாலம், சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் மீதம் உள்ள பணிகள் முடியாத காரணத்தால்.. இப்போதைக்கு பாலத்தை பயன்படுத்த முடியாது.
வேகமெடுக்கும் பணிகள்: மும்பை டூ சென்னை!
இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 91 தூண்கள் (Piers) அமைக்கப்பட வேண்டும். அதில் 50-க்கும் மேற்பட்ட தூண்கள் நட்டு முடிக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக, மும்பை மற்றும் குஜராத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ப்ரீ-ஃபேப்ரிகேட்டட் ஸ்பேன்கள் (Pre-fabricated spans) பொருத்தப்பட்டு, பாலம் தன் முழு வடிவத்தைப் பெறத் தொடங்கியுள்ளது.
சைதாப்பேட்டையில் இருந்து 80 மீட்டர் தூரத்திற்குத் தார்ச் சாலை அணுகுமுறைப் பாதை (Approach road) அமைக்கப்பட்டு, அங்கிருந்து சி.ஐ.டி நகர் வரை கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.
மெட்ரோவின் பலம்: 1,000 டன் தாங்கும் சக்தி!
இந்தத் திட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான தொழில்நுட்பக் கூட்டணி அரங்கேறியுள்ளது. மேம்பாலத்தின் 91 தூண்களில் சுமார் 69 தூண்கள் மெட்ரோ ரயில் பாதைக்கு நேர் மேலாக அமையவுள்ளன.
"மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே இதற்கான அடித்தளத்தை (Foundation) அமைத்து, நெடுஞ்சாலைத் துறை பாலத்தைத் தாங்குவதற்கான சப்போர்ட் கட்டமைப்புகளை வழங்கியுள்ளது. மெட்ரோவின் இந்த அடித்தளம் சுமார் 1,000 டன் எடையைத் தாங்கும் வல்லமை கொண்டது" என்கிறார் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர்.
பணிகளை விரைவுபடுத்த மேற்கு வங்கத்திலிருந்து கூடுதலாக 300 தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, தற்போது மொத்தம் 600 பேர் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
நந்தனம் டூ தேனாம்பேட்டை: காத்திருக்கும் சவால்!
ஒரு பக்கம் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்தாலும், நந்தனம் முதல் தேனாம்பேட்டை வரையிலான அடுத்த பகுதியில் இன்னும் சவால்கள் நீடிக்கின்றன. அங்கு இப்போதுதான் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
மின்சாரத் தடை: 230kV நிலத்தடி மின்சார கேபிள்களை மாற்றும் பணி தாமதமானதே இதற்குக் காரணம்.
காலக்கெடு: இப்பகுதியில் பாலம் கட்டப்படுவதற்கு இன்னும் 4 மாதங்களாவது ஆகும் என்கிறார்கள் அதிகாரிகள்.
போக்குவரத்து மாற்றம்: தற்போது தேனாம்பேட்டை, செனோடாப் சாலை மற்றும் தி.நகர் தியாகராய சாலை வழியாகப் பேருந்துகள் திருப்பி விடப்படுவது கடும் போக்குவரத்து நெரிசலை உருவாக்குவதாகப் பொதுமக்கள் குமுறுகின்றனர்.
"தி.நகர் பகுதியில் மாலை நேரங்களில் நெரிசல் உச்சத்தில் இருக்கிறது. குறுகிய சாலைகளில் பேருந்துகளும் லாரிகளும் செல்வதால் வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள். நந்தனம் பகுதிப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்" என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
தற்போது சைதாப்பேட்டை - சி.ஐ.டி நகர் பகுதியில் தடுப்புகள் (Barricades) அகற்றப்பட்டு, ஜோன்ஸ் சாலை சந்திப்பு அருகே 'யூ-டர்ன்' வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது அந்தப் பகுதியில் ஓரளவுக்கு நெரிசலைக் குறைத்துள்ளது. முழுப் பாலமும் பயன்பாட்டுக்கு வரும்போது, அண்ணா சாலை 'சிக்னல் இல்லாத' சாலையாக மாறும் என்பது மட்டும் நிச்சயம்!
-
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications