பூர்ணிமாவிடம் பாக்யராஜ் சொன்ன கடைசி வார்த்தை! 20 நிமிட வாக்கிங்கில் என்னாச்சு? சோபாவில் சாய்ந்ததுமே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எத்தனையோ திட்டங்களோடும், எழுத்தாளர் சங்கத்தை மேம்படுத்த வேண்டும் என்ற பல கனவுகளோடும் இருந்த மாமனிதர் பாக்யராஜ்.. அவைகளை பற்றி என்னிடம் அரை மணி நேரம் பேசினார்.. ஆனால், அடுத்த 2 நாட்களில் திடீரென நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சிதான்.. அடுத்த நிமிடம் என்பது யாருக்கும் நிரந்தரமில்லை என்பதை இறைவன் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். நாம்தான் அதையெல்லாம் புரிந்து கொள்வதில்லை என்கிறார் பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்செயன்.

Media circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள தனஞ்செயன், "ஒரே மாதத்தில் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் ஆகிய 2 மாபெரும் ஆளுமைகளை நாம் இழந்துவிட்டோம். அதிலும் குறிப்பாக, பாக்யராஜ் அவர்களின் மறைவை யாராலுமே எதிர்பார்க்க முடியவில்லை.

Poornima

ஏனென்றால் அவர் மறைவதற்கு 2 நாட்களுக்கு முன்புதான், என்னுடைய "லவ் லவ்" படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சீஃப் கெஸ்ட்டாக வரும்படி, அவரை போனில் தொடர்பு கொண்டு கேட்டேன் .

பாக்யராஜ் ஆசைப்பட்ட விஷயம்

அப்போது பாக்யராஜ் என்னிடம், "இப்போது திரைக்கதை எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் மற்றும் அதிலுள்ள சில பஞ்சாயத்துகள் போய்க்கொண்டிருக்கின்றன, அதை முதலில் தீர்த்து வைக்க வேண்டும் என்றார்.. சங்கத்தில் தற்போது இருக்கும் சில நடைமுறைப் பிரச்சினைகளையும் என்னிடம் கிட்டத்தட்ட அரை மணி நேரம் விவாதித்தார்.

அப்போது நான் அவரிடம், உங்கள் அணியின் சார்பாக நான் போட்டியிடுகிறேன், மும்பையில் உள்ள ஸ்கிரீன் ரைட்டர்ஸ் அசோசியேஷன் (SWA) போன்று எல்லாரும் ஆன்லைனில் சுறுசுறுப்பாக இயங்கும் வகையில், நம்முடைய எழுத்தாளர்கள் சங்கத்தையும் தொழில்நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். நம்முடைய ஆக்டிவ் புரொட்யூசர்ஸ் அசோசியேஷனில் மெயில் அனுப்பிய 5 நிமிடங்களில் தீர்வு காண்கிறோம், அதுபோலவே ஒரு முறையை இங்கும் கொண்டு வர வேண்டும்' என்று என்னுடைய திட்டங்களை அவரிடம் சொன்னேன்..

2 நாளிலேயே பேரதிர்ச்சி

அதையெல்லாம் கேட்ட பாக்யராஜ், "உங்கள் பிளான் எல்லாம் பெரிசா இருக்கே.. நீங்கள் நேரா என் ஆபீசுக்கு வாங்க.. அங்கே இதை பற்றி பேசலாம்.. நாளை கோவா செல்கிறேன், வந்ததுமே தேர்தல் பற்றி விரிவாக பேசலாம் என்றார்..

எத்தனையோ திட்டங்களோடும், சங்கத்தை மேம்படுத்த வேண்டும் என்ற பல கனவுகளோடும் இருந்த ஒரு மாபெரும் மனிதர், அடுத்த 2 நாட்களில் திடீரென நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்ற செய்தி பெரிய அதிர்ச்சிதான்.. அடுத்த நிமிடம் என்பது யாருக்கும் நிரந்தரமில்லை என்பதை இறைவன் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். நாம்தான் அதை புரிந்து கொள்வதில்லை..

பூர்ணிமா சொன்னது என்ன

பாக்யராஜ் மனைவி பூர்ணிமாவை சந்தித்து ஆறுதல் சொன்னேன்.. என்னிடம் அவர், "எனக்கு ஒண்ணுமே புரியவில்லை, நாங்கள் 2 பேரும் காலையில் 20 நிமிடங்கள் நன்றாகத்தான் வாக்கிங் போனோம்.. கொஞ்சம் டயர்டாக இருப்பதாக சொல்லி, வீட்டிற்குப் போலாம் என்றார்.

எப்பவுமே வாக்கிங் போகும்போது டயர்டு ஆகிவிட்டால், நான் வீட்டிற்கு போறேன், நீ நடந்துவிட்டு வா என்று பாக்யராஜ் பூர்ணிமாவிடம் சொல்வாராம்.. அது போலவே இந்த முறையும் பாக்யராஜ் அப்படி சொல்லி உள்ளார்.. ஆனால் பூர்ணிமாவுக்கு ஏதோ பயம் வந்துள்ளது.. இல்லையில்லை நானும் உங்களுடனேயே வருகிறேன் என்று சொல்லி, பாக்யராஜுடனேயே வீட்டுக்கு வந்துள்ளார்.

ஆஸ்பத்திரி அழைத்து சென்ற சாந்தனு

வீட்டிற்கு வந்து உட்கார்ந்த அடுத்த நிமிடமே, பாக்யராஜுக்கு சுவாசக் குறைபாடு (Gasping) ஏற்பட்டுள்ளது.. உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு சாந்தனு அழைத்து சென்றுள்ளனர், அங்கிருந்தவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தவும், அதன்படியே அழைத்து சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது.

பாரதிராஜா அவர்கள் பல மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போது 'ஏன் இவ்வளவு வேதனைப்படுகிறார், 85 வயதில் இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாரே என்றெல்லாம் தோன்றும். ஆனால், எப்போதும் சுறுசுறுப்பாக இருந்த பாக்யராஜ் அவர்களுக்கு ஏன் இப்படி திடீரென நேர்ந்தது என்பதுதான் தெரியவில்லை என்றெல்லாம் வேதனையும், அதிர்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+