நேபாளத்தில் மீண்டும் பதற்றம்.. டிக்டாக் வீடியோவால் வெடித்த வன்முறை! இந்தியாவுடனான எல்லை சீல்
காத்மாண்டு: நேபாளத்தில் ஜென் சி தலைமுறையினர் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்ததில் ஆட்சி மாற்றமே ஏற்பட்ட நிலையில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மசூதி சேதப்படுத்தப்பட்டதாக வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அங்கு நடந்த போராட்டம் மீண்டும் வன்முறையாக மாறியுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நிலமை கையை மீறி செல்வதால் தற்போது இந்தியாவுடனான எல்லையை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியர்களும் நாடு திரும்ப தொடங்கியுள்ளனர்.

நேபாளத்தில் மீண்டும் பதற்றம்
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த ஆண்டு ஆளும் அரசுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றது. ஜென் சி தலைமுறையினர் நடத்திய இந்த போராட்டத்தில் வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ஆட்சியில் இருந்த கேபி சர்மா ஒலி பதவி விலகினார்.
இதையடுத்து, நேபாளத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நேபாளத்தின் பர்சா மாவட்டத்தில் மத பதற்றத்தை தூண்டும் வகையில் வீடியோ ஒன்று வைரல் ஆனது.
வீடியோவை கண்டித்து போராட்டம்
இந்த வீடியோவை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிர்கஞ்ச் நகரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் ரக்சல் மாவட்டத்தில் உள்ளது. இது இந்தியாவின் பீகாரை ஒட்டிய பகுதியாகும்.
நிலமை கையை மீறி செல்வதால் தற்போது இந்தியாவுடனான எல்லையை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு
முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஹைதர் அன்சாரி மற்றும் அமநத் அன்சாரி என்ற இருவர், சமூக வலைத்தளங்களில் பிற மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. நேபாளத்தில் உள்ள தனுஷா மாவட்டத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த வீடியோ டிக் டாக் உள்ளிட்ட வலைத்தளங்களில் வைரலான நிலையில், மத பதற்றம் ஏற்பட்டது. உள்ளூர் மக்கள் இருவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேற்கூறிய இரு நபர்கள் வெளியிட்ட வீடியோவால், மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டினர்.
பதற்றம் அதிகரித்தது
இதற்கிடையே, சக்வா மாரன் பகுதியில் உள்ள மசூதி ஒன்று சேதப்படுத்தப்பட்டது. இதனால், அங்கு பதற்றம் அதிகரித்தது. மக்கள் வீதிகளில் வந்து போராட தொடங்கினர். அப்போது அங்குள்ள இந்து அமைப்புகள், இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள் என்று கூறினர். இது நிலைமையை இன்னும் மோசமாக்கியது.
நாடு திரும்பும் இந்தியர்கள்
சிறிது நேரத்தில் போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். உள்ளூர் போலீஸ் நிலையத்தையும் சூறையாடினர். நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதையடுத்து பிர்கஞ்ச் பகுதியில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நிலமை மோசமாகி வரும் நிலையில், அங்கு பணியாற்றி வரும் இந்தியர்கள் நாடு திரும்ப தொடங்கியுள்ளனர். பிர்கஞ்ச் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கு இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று இந்திய தொழிலாளி ராகேஷ் என்பவர் கூறினார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications