For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகில் 12 'கே' இமாம்கள், ஓரினச்சேர்க்கையை இஸ்லாம் எதிர்க்கவில்லை: இமாம் அப்துல்லா

By Siva
Google Oneindia Tamil News

வாஷிஷ்டன்: உலகில் மொத்தம் 12 ஓரினச்சேர்க்கையாளர் இமாம்கள் இருப்பதாகவும் அதில் 8 பேர் அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாகவும் ஓரினச்சேர்க்கையாளர் இமாம் தாயீ அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஓரினச்சேர்க்கையை இஸ்லாம் எதிர்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்தவர் ஆப்பிரிக்க-அமெரிக்கரான தாயீ அப்துல்லா. கருப்பினத்தை சேர்ந்த அவர் தனக்கு 30 வயது இருக்கையில் இஸ்லாத்திற்கு மாறினார். வாஷிங்டனில் உள்ள மசூதி ஒன்றில் இமாமாக உள்ளார்.

இந்நிலையில் அவர் ஓரினச்சேர்க்கை பற்றி கூறுகையில்,

கே இமாம்

கே இமாம்

ஓரினச்சேர்க்கையாளர் இமாமாக இருப்பது கடினம். ஆனால் அத்தகைய இமாம்களாகிய நாங்கள் இருக்கத் தான் செய்கிறோம். உலகில் மொத்தம் 12 ஓரினச்சேர்க்கையாளர் இமாம்கள் உள்ளனர். அதில் 8 பேர் அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டவர்கள். மேற்கத்திய நாடுகளில் எங்களை போன்ற இமாம்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆர்லான்டோ துப்பாக்கிச்சூடு

ஆர்லான்டோ துப்பாக்கிச்சூடு

ஆர்லான்டோ துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அறிந்து கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன். அந்த தாக்குதலை நடத்தியது முஸ்லீமாக இருக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் அவர் ஒரு முஸ்லீம். இந்த சம்பவத்தின் பின்விளைவுகளை பிற முஸ்லீம்கள் சந்திக்க வேண்டி உள்ளது.

குர்ஆன்

குர்ஆன்

குர்ஆனில் எந்த பிரச்சனையும் இல்லை. அதை மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதில் தான் பிரச்சனை. ஆண்கள் சக ஆண்களை முத்தமிடுவதில் தப்பில்லை. நான் இஸ்லாமிய நாடுகளில் பல ஆண்களை முத்தமிட்டுள்ளேன். அதில் செக்ஸுக்கு இடமில்லை.

ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கை

இஸ்லாம் ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குர்ஆனிலும் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக எதுவும் இல்லை. குர்ஆனில் திருமணம் செய்வதற்கு பாலினத்தை குறிப்பிட்டு சொல்லவில்லை.

English summary
African-American gay imam Daaiyee Abduallah said that there are 12 gay imams in the world and islam doesn't oppose homosexuality.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X