மதுரையில் உச்சத்தை தொட்ட மல்லிகைப்பூ விலை! 1 கிலோ ரூ 12000! பேசாம ஒரு கிராம் தங்கமே வாங்கிடலாம்!
மதுரை: மதுரையில் மல்லிகை பூ கிலோ 12,000 ரூபாய்க்கு விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் பனிப்பொழிவால் வரத்து குறைந்து விலை உயர்ந்தது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலைக்கு ஒரு கிலோ மல்லிகைப்பூ விற்பனை செய்யப்படுகிறது.
பூக்களில் அனைவருக்கும் பிடித்தமான பூ மல்லிகை! இந்த மல்லிகை பூவை வைத்து நிறைய சினிமா பாடல்கள் வந்துள்ளன. உதாரணமாக "மல்லிகை என் மன்னன் மயங்கும்", "மல்லிகையே மல்லிகையே", "மல்லிகை பூவுக்கு கல்யாணம்", "மல்லிகை மாலை கட்டி", "மல்லிகை மல்லிகை", "மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே" என நிறைய பாடல்கள் வந்துள்ளன.

இந்த பூவை பலருக்கு பிடிக்க காரணமே இதன் வாசனைதான். இப்படி தனது வாசனையால் அனைவரையும் மயக்க வைக்கும் இந்த பூ, அதனை நுகராமலேயே விலையே கேட்டால் மயங்க வைக்கிறது.
மதுரையில் மல்லிகை பூ கிலோ 12,000 ரூபாய்க்கு விற்பனையானது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மதுரைக்கு பெருமை சேர்க்கும் மல்லிகைப் பூ, தற்போது விலையிலும் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
உசிலம்பட்டியில் ஒரு கிலோ 12,000 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது, சாதாரண மக்களை மட்டுமல்ல, பூ வியாபாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பூச்சந்தையில் ஒரு கிலோ 9000 ரூபாய்க்கும், தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் மலர்ச்சந்தையில் கிலோ 8000 ரூபாய்க்கும் மல்லிகை விற்பனையானது. மற்ற மாவட்டங்களிலும் விலை உயர்ந்து காணப்பட்டது.
திருமங்கலத்தில் 7000 ரூபாய்க்கும், அருப்புக்கோட்டையில் 7000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஒரு கிலோ மல்லிகை 6780 ரூபாய்க்கு விற்பனையானது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டில் குறைந்த விலையாக 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் இது மற்ற நாட்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விலை உயர்வுக்கு காரணம் என்ன? என பூ வியாபாரிகளிடம் கேட்ட போது "தமிழ்நாட்டில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு பூ வரத்து குறைந்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கு முக்கிய காரணம்" என தெரிவித்தனர்.
சாதாரண நாட்களில் 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை, தற்போது 7000 முதல் 8000 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் பூ கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. வரத்து இன்னும் குறைய வாய்ப்புள்ளதால் விலை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே நிலை நீடித்தால், ஒரு முழம் மல்லிகைக்கு பதிலாக அரை கிராம் தங்கம் வாங்கி பரிசளிக்கலாம் என கூறும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. மல்லிகை பிரியர்கள் மட்டுமல்ல, எல்லோரும் இந்த விலை உயர்வை வியப்புடன் பார்க்கின்றனர். தங்கம் விலை இன்றைய தேதியில் ஒரு கிராம் ரூ 12,800-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு சவரன் ரூ 1,03,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications