தமிழகத்தின் தலைமைக்கு ஆளில்லை என்றால்... ரஜினிக்கு பாரதிராஜா ஆவேச எச்சரிக்கை!
தமிழகத்தில் தலைமை இல்லை என்றால் உங்களுக்கு என்ன அக்கறை எங்கள் பிரச்னையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று இயக்குனர்பாரதிராஜா சாடியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் காசு சம்பாதிக்கலாம்... ஆனால் தலைமை பொறுப்பிற்கு யாரும் வரத் தேவையில்லை என்று இயக்குனர் பாரதிராஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள் 8 பேர் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது" திருமுருகன்காந்தி முதல்வர் சீட் கேட்டாரா நினைவேந்தல் கூட்டம் நடத்தியதற்கு எதற்காக குண்டர் சட்டம்" என்றார்
ஒரு இனத்தை அழிக்க நடந்த முயற்சியை எடுத்துக் கூறவே நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. தமிழ் மொழி, இனம், வீரம் துருப்பிடித்து விட்ட நிலையில் இது போன்ற கூட்டங்கள் அவசியம் தானே என கேள்வி எழுப்பினார் பாரதிராஜா.

படுக்கையில் பங்கு கேட்காதே
தமிழகம் பிரிந்து கிடக்கிறது, வெட்டி குத்திக்கொண்டு கிடக்கிறது என்றால் அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என் பெண்டாட்டிக்கு பிள்ளை இல்லை என்றால் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் உனக்கு ஏன் அக்கறை. என் படுக்கையில் நீ பங்கு கேட்காதே.

தமிழன் தான் தலைவன்
என் பெண்டாட்டிக்கு பிள்ளை ஊனமாக பிறக்கும் என்பதால் நீ வந்து பிள்ளை கொடுப்பாயா. தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும், யார் வேண்டுமானாலும் இங்கு வந்து பணம் சம்பாதிக்கலாம், ஏன் அரசியலுக்குக் கூட வரலாம் ஆனால் தலைமை தமிழனாகத் தான் இருக்க வேண்டும்.

தலையாட்டி பொம்மைகள்
தமிழகத்தில் இரு அணிகளும் தலையாட்டி பொம்மைகளைப் போல உள்ளன. ஏதாவது ஒன்றாவது உருப்படியாக இருக்கும் என நினைத்தேன், ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. திருமுருகன் மீதான வழக்கு தமிழக அரசின் சொந்த கருத்தில்லை யாரோ ஆட்டிவைப்பதற்கு ஆடும் கைப்பாவையாக உள்ளது என்று விமர்சித்துள்ளார் பாரதிராஜா.

இனப்படுகொலை ஏன் தெரியுமா?
லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே ஏன் என்று தெரியுமா, தமிழர்களில் பலருக்கே தெரியாது. ஏன் அந்த சமயத்தில் அழலாமா வேண்டாமா என்று கூட யாருக்கும் தெரியவில்லை. இலங்கை இனப் படுகொலைக்காக ஆந்திரா, கர்நாடக மாநில மக்கள் அழுதார்களா? இதையெல்லாம் கேட்க வேண்டிய பொறுப்பு மீடியாக்களுக்கு உள்ளது.

மடியில் கனம் இல்லை
எங்களிடம் இருக்கும் மிகப்பெரிய ஊடகத்தை பயன்படுத்தி நிச்சயம் இந்த அநியாயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால் பயமில்லை, ஆனால் ஆட்சியாளர்கள் அப்படி இல்லை என்று விளாசினார் பாரதிராஜா.
-
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
"இந்த உலகத்தை விட்டு போக பயமாக இருக்கிறது..." ஏனென்றால்! மறைவுக்கு முன் பாரதிராஜா சொன்ன வார்த்தை -
"இனி யாரோடு பாடுவேன்? பாரதிராஜாவை சிரிக்க வைத்த வீடியோவை பகிர்ந்து உருகிய வைரமுத்து!" ரசிகர்கள் ஆறுதல் -
பாக்ஸுக்குள் இருந்த வைரக்கல்... பாரதிராஜாவின் அந்த ஒரு முடிவால் ராதாரவிக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன? -
"என் குருநாதர்.. என்னால வர முடியாம போச்சு.." பாரதிராஜா மறைவு.. கண் கலங்கிய நெப்போலியன்.. அஞ்சலி! -
அது நடக்காமலேயே போயிடுச்சு.. பாரதிராஜாவிற்கு தேனியில் அஞ்சலி செலுத்திய கருணாஸ் உருக்கமான பேட்டி -
பாரதிராஜா உடலுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! அமைச்சர் ராஜ்மோகன் தகவல் -
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications