வெற்றி களிப்பா, தோல்வி பயமா?, ஜெயலலிதா சொன்ன சிங்கிள் வரி பேட்டிக்கு என்ன அர்த்தம்?
சென்னை: இன்னும் 2 நாட்களில் மக்களின் தீர்ப்பு என்ன என்பது தெரிந்துவிடும் என்ற ஒற்றை வார்த்தையை முதல்வர் ஜெயலலிதா கூறினாலும், கூறினார், அவரது வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பது குறித்து சீனியர் பத்திரிகையாளர்கள் நடுவே பெரும் விவாதமே எழுந்துள்ளது.
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஜெயலலிதா வாக்குப்பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து அந்த இடமே, ஒளிவெள்ளத்தால் நிரம்பும் அளவுக்கு, பத்திரிகை கேமராமேன்களால், பிளாஸ் போட்டு புகைப்படங்கள் எடுத்து தள்ளப்பட்டன.

அதேநேரம், ஜெயலலிதாவின் அருகே சென்று பேட்டியெடுக்க ஜெயா டிவியை தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேநேரம், அவர்பேசுவது பிற பத்திரிகையாளர்களுக்கு கேட்க வசதியாக ஒலி பெருக்கி வைக்கப்பட்டிருந்தது.
அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, பதிலளித்த ஜெயலலிதா, இன்னும் இரண்டு தினங்கள் காத்திருந்தால் மக்களின் தீர்ப்பு என்னவென்று தெரியும் என்று கூறிவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டார்.
ரிசல்ட் வரும்வரை காத்திருங்கள் என்று, ஜெயலலிதா கூறியது அனேகமாக இதுதான் முதல்முறை என்றும், இது பதற்றத்தை காட்டுவதாகவும் கூறுகிறார், 'தி வீக்' ஆங்கில இதழின் மூத்த பத்திரிகையாளர் லட்சுமி.
ஜெயலலிதாவின் உடல் மொழி மிகவும் பதற்றத்தோடும், பலவீனமாகவும் இருந்ததாகவும், இது, தோல்விக்கான அறிகுறி என்றும் கூறுகிறார் சிஎன்என்-ஐபிஎன் சேனலின் துணை ஆசிரியர் ஜக்கா ஜேக்கப்.
In two days, you will know as to what is the judgement of the people: CM Jayalalithaa after casting her vote.#TN pic.twitter.com/rPiaumr5Y0
— ANI (@ANI_news) May 16, 2016
இது ஒருபுறம் இருக்க, 2 நாள் காத்திருங்கள் என்று கூறியது, வெயிட் அன்ட் சீ என்ற பேச்சின் பொருளில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது என்கிறார்கள் வேறு சில சீனியர் பத்திரிகையாளர்கள். வெற்றி உறுதியாகிவிட்டது என்ற தகவலை அறிந்ததால்தான், பொறுத்திருந்து பாருங்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார் என்கிறார்கள் அவர்கள்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications