சசிகலா குடும்பத்தைத் தேடித்தேடி போய் ஆறுதல் கூறிய மோடி #jayalalithaa
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது சசிகலா குடும்பத்தினரை தேடி போய் ஆறுதல் கூறினார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து தனி ஹெிகாப்டரில் மோடி புறப்பட்ட மோடி, அடையாறு கடற்படை தளத்தில் வந்து இறங்கியதும் ராஜாஜி அரங்கிற்கு வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு வெள்ளை மலர்கள் கொண்ட மலர் வளையம் வைத்து தொட்டு கும்பிட்டு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி.

அருகில் நின்றிருந்த சசிகலா, இளவரசியைத் தேடி போன மோடி ஆறுதல் வார்த்தைகள் பேசினார். சசிகலாவின் தலையை தொட்டு ஆறுதலாக பேசினார். இளவரசி, திவாகரன், உள்ளிட்டோர்களிடமும் ஆறுதலாக பேசினார் மோடி.
அந்த நேரத்தில் அருகில் வந்த ஓ.பன்னீர் செல்வம், மோடியைப் பார்த்து குமுறி குமுறி அழுதார். ஓ.பன்னீர் செல்வத்தைப் பிடித்து ஆறுதல் சொன்னார் மோடி ஆசுவாசப்படுத்தினார்.
கூடியிருந்த மக்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார் பிரதமர் மோடி. அனைவரின் கைகளை பிடித்தும் ஆறுதல் சொன்னார். இறுகிய முகத்துடன், கலங்கிய கண்களுடன் ஜெயலலிதாவின் உடல் அருகே நின்று கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஒருமுறை கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார் பிரதமர் மோடி.
சசிகலா குடும்பத்தினரை தேடி தேடி போய் மோடி ஆறுதல் சொல்லி பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
#WATCH: PM Modi pays his last respects to #Jayalalithaa at Rajaji Hall in Chennai. pic.twitter.com/Wass8nxUpv
— ANI (@ANI_news) December 6, 2016
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications