ஜெ. வீட்டிற்கே மோடி சென்றது கூட்டணிக்கான முதற்கட்ட சமிக்ஞை போலும்: கருணாநிதி
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டிற்கே சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்களும் சென்று பேசியது கூட்டணிக்கான முதற்கட்ட சமிக்ஞை போலும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கேள்வி, பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேள்வி: அ.தி.மு.க. அமைச்சர்களின் நண்பர் என்று கூறப்பட்ட அன்புநாதன் உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருக்கிறாரே?
பதில்: அ.தி.மு.க. அமைச்சர்கள் மூன்று பேருக்கு மிகவும் நெருங்கிய இந்த அன்புநாதன் வீட்டிலும், குடோனிலும் சோதனையிட்டு கோடிக் கணக்கான ரூபாய், ஆம்புலன்ஸ் கார், பணம் எண்ணும் 12 இயந்திரங்கள் எல்லாம் கைப்பற்றப்பட்ட செய்திகள் எல்லாம் ஏடுகளிலே விரிவாக வெளி வந்தன. இவ்வளவுக்கும் காரணமான அன்புநாதன் கடைசி வரை தமிழக அரசினால் கைது செய்யப்படவில்லை.

மாறாக அவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி, அரசு வழக்கறிஞர்களும் என்ன காரணத்தாலோ அதற்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவிக்காத காரணத்தால், நீதிமன்றம் அன்புநாதனுக்கு முன் ஜாமீன் வழங்கி, அன்றாடம் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அவர் கையெழுத்து போட வேண்டுமென்று உத்தரவிட்டது. ஆனால் இந்த அன்புநாதன் நீதிமன்ற உத்தரவுப்படி காவல் நிலையம் சென்று கையெழுத்து போடவே இல்லை.
தனக்கு உடல் நலம் சரியில்லை என்று தெரிவித்து விட்டு, காவல் நிலையத்திற்கே செல்லவில்லை. தற்போது வருமான வரித் துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் பதிவு செய்த மற்றொரு வழக்கிலும் இத்தனை நாட்கள் கழித்து, தனக்கு முன் ஜாமீன் தரக் கோரி நீதிமன்றத்தில் அன்புநாதன் பெயரில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதாம். அன்புநாதன் போன்றோருக்கு முன் ஜாமீன் வழங்குவது, செய்த முறைகேடுகளின் தடயங்களை மாற்றவும், மறைக்கவுமே பயன்படும் என்பதை அனைவரும் அறிவர்!
கேள்வி : மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க., தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்று "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேட்டில் செய்தி வந்திருக்கிறதே?
பதில்: "BJP hopes to have Jayalalithaa on board NDA soon - AIADMK may join Alliance, but not Government" என்ற தலைப்பில் 4-6-2016 அன்று வெளி வந்துள்ள செய்தியில் பா.ஜ.க. வும், அ.தி.மு.க. வும் கூட்டணி அமைக்கக்கூடும் என்று தான் எழுதியுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டிற்கே சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்களும் சென்று பேசியது கூட்டணிக்கான முதற்கட்ட சமிக்ஞை போலும்! தொடர்ந்து மோடி அவர்களும், அருண்ஜெட்லி அவர்களும் ஜெயலலிதாவிடம் மிருதுவான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
கரூர் - அய்யம்பாளையம் அன்புநாதன் தொடர்பான நிகழ்விலும், திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்திலும் மத்திய அரசின் பொருளாதாரப் புலனாய்வு அமைப்புகளின் அலட்சியமும், அக்கறையின்மையும்; தேர்தல் ஆணையம் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டுமென்பதற்காகச் செய்த காரியமும்; மத்திய அரசின் உளவுத் துறை தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியைப் பிளவுபடுத்துவதில் கொண்டுள்ளதாகச் சொல்லப்படும் ஆர்வமும்; பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கான அடையாளங்கள் தான் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க.வின் உதவி டெல்லியிலும், அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க.வின் துணை தமிழ்நாட்டிலும் தேவைப்படுகிறது அல்லவா?
கேள்வி : சிறைச்சாலைகளில் கைதிகள் இறப்பது பற்றி தமிழக அரசு ஒரு வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை செய்திருப்பதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?
பதில்: தற்போது எல்லாம் அ.தி.மு.க. அரசு, சென்னை உயர் நீதி மன்றத்தின் இப்படிப்பட்ட எச்சரிக்கைகளை, கண்டனங்களாக நினைப்பது இல்லை; அரசுக்கு நீதி மன்றம் வழங்குகின்ற பாராட்டு மழையாகத் தான் கருதிக் கொள்கிறார்கள். தமிழகத்திலே உள்ள மத்திய சிறைச்சாலைகளில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 264 கைதிகள் இறந்துள்ளனர். அதில் 140 கைதிகளின் இறப்பு தொடர்பான அறிக்கை இன்னும் வழங்கப்படவில்லை. விசாரணைக் கைதிகளுக்கு முறையான மருத்துவ வசதிகள் செய்து கொடுப்பதில்லை என்றெல்லாம் புகார் கூறி மத்திய சிவில் உரிமை மையத்தின் இணைச் செயலாளராக உள்ள வழக்கறிஞர் கே. கேசவன் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "Though the Bench had asked the Principal Secretary of Home Department on December 2, 2015, seeking explanation, the official was unable even after eight weeks. On March 25 this year, the court was informed that the affidavit was not ready, said the judges, adding, "The affidavit has not seen the light of the day. This is an extremely casual attitude towards as Court's order." சிறையில் கைதிகள் மரணமடைவது தொடர்பாகவும், அவர்களது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தோம். ஆனால் தேர்தல் நடைபெறுவதைக் காரணம் காட்டி, அதிகாரிகள் கால அவகாசம் கேட்டிருந்தனர். தற்போது தேர்தல் முடிந்து விட்டது. எனவே ஒரு வார காலத்துக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக் கிறார்கள். இதனை "High Court raps Government for being callous to Prison Deaths" (உயர் நீதி மன்றம், தமிழக அரசை, சிறைச்சாலைகளில் ஏற்படும் சாவுகள் குறித்து அக்கறையற்று இருப்பதற்குக் கண்டனம் தெரிவித்தது) என்று எழுதியுள்ளது.
கேள்வி : மத்திய - மாநில அரசுகளிடையே விரைவில் மும்மொழிகளில் தகவல் தொடர்பு வரக்கூடுமா?
பதில்: மத்திய - மாநில அரசுகளிடையிலான தொடர்பு மொழி குறித்து அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு விரைவில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளனர். மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல்வேறு முக்கிய தகவல்களை அவ்வப்போது அனுப்பி வருகிறது. இவற்றை எந்த மொழியில் அனுப்ப வேண்டுமென்று மத்திய அரசின் உத்தரவு எதுவும் இருப்பதாகத் தெரிய வில்லை. தற்போது தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தி பேசும் மாநிலங்களுக்கு இந்தியிலும் மத்திய அரசினால் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் தமிழ் உட்பட மொத்தம் 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இந்த 22 மொழிகளையும் மத்தியிலும் ஆட்சி மொழிகளாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.
-
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன? -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications