Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் உள்ள வங்கியில் ரூ.22 லட்சத்தை அபேஸ் செய்த ஊழியர்

வேலூரில் பாகாயத்தில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் உள்ள வங்கியில் ரூ.22 லட்சம் மாயமான விவகாரத்தில் அந்த வங்கி ஊழியரே திருடியது அம்பலமானதை அடுத்து போலீஸார் அவரை கைது செய்து அந்த தொகையையும் பறிமுதல் செய

Subscribe to Oneindia Tamil

வேலூர்: புகழ்பெற்ற வேலூர் சிஎம்சி மருத்துவமனஐௌ வளாகத்தில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில ரூ.22 லட்சம் மாயமானது. சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளில் வங்கி ஊழியரே திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் ஊழியரை கைது செய்தனர்.

பாகாயத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி வளாகத்தில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா கிளை இயங்கி வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக வசூலிக்கப்படும் பணத்தை கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஊழியர்கள் இந்த வங்கி கிளையில் டெபாசிட் செய்வது வழக்கம்.

Rs. 22 lakhs missed in Central bank of India bank in CMC Hospital

இதனால் இரவு நேரத்திலும் இந்த வங்கியானது ஒரு ஊழியர் பணியமர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த கிளையில் இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.22 லட்சம் திடீரென மாயமானது. எனினும் வங்கியின் கதவுகளோ அல்லது பூட்டுகளோ உடைக்கப்படவில்லை என்பதால் இந்த பணம் மாயமான விவகாரம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

பிரபல மருத்துவமனை என்பதால் எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு வங்கியில் பணம் மாயமானதால் பொதுமக்களும், நோயாளிகளும் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பாகாயம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில், வங்கியின் வென்டிலேட்டரை உடைத்து ஊழியரே திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில் அவர் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.22 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+