Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை மீண்டும் அட்டூழியம்.. இன்றும் 7 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

நாகை: தமிழக கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படை நாள்தோறும் தமிழக மீனவர்களை வேட்டையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இலங்கை சிறையில் 21 தமிழக மீனவர்கள் வாடுகின்றனர். அவர்களின் 30 படகுகளும் பிடித்து வைக்கப்பட்டுள்ளன.

slnavyarrest

இந்த மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்; படகுகளை மீட்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். பிரதமர் மோடிக்கு நேற்று கூட முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள் எனக் கூறி இலங்கை கடற்படை அவர்கள் அனைவரையும் சிறைபிடித்து சென்றுள்ளது. தொடரும் இச்சம்பவங்கள் மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+