“மச்சான்.. எந்திரிச்சு வாடா.. கடைசியா ஒரு கோல் அடிடா!” சடலமான தோழனை கோல் அடிக்க வைத்த சக நண்பர்கள்
கொழும்பு: மரணத்தை விட கொடியது எது தெரியுமா? நேற்றோடு நம்முடன் சிரித்துப் பேசி விளையாடிய ஒரு நண்பனை, இன்று சடலப் பேழைக்குள் பார்ப்பதுதான்.
ஆம்... இலங்கையின் முல்லைத்தீவு மண்ணையே இன்று சோகக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது ஒரு நெஞ்சை உருக்கும் காட்சி. கடந்த ஜனவரி 12-ஆம் தேதி முரசுமோட்டை பகுதியில் நடந்த அந்த கோர விபத்து, துடிப்பான கால்பந்தாட்ட வீரரான அந்த ஒரு இளைஞரின் கனவுகளை ஒரே நொடியில் சிதைத்துவிட்டது.

விளையாட்டு என்பது முல்லைத்தீவில் வெறும் பொழுதுபோக்கு அல்ல; அதுதான் அவர்களின் உயிர். அதிலும் உயிரிழந்த வாலிபருக்கும் அவரது நண்பர்களுக்கும், கால்பந்து மைதானம் என்பது ஒவ்வொரு நாளும் வியர்வை சிந்தி, வெற்றிகளைப் பகிர்ந்துகொண்ட புனிதமான இடம்.
தன்னுடன் விளையாடிய நண்பன் இனி எழுந்து வரமாட்டான் என்று தெரிந்தும், அந்த நண்பனின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவனது சக வீரர்கள் செய்த காரியம் இருக்கிறதே... அது பார்ப்பவர் எவரையும் கல் நெஞ்சையும் கரையச் செய்யும்.
இறுதி ஊர்வலத்தின் போது, தன் நண்பனின் சடலப் பேழையை சுமந்து கொண்டு அவர்கள் நேராகச் சென்றது இடுகாட்டிற்கு அல்ல... அவர்கள் ஓடித் திரிந்து விளையாடிய அந்த கால்பந்து மைதானத்திற்கு!
அங்கே, கோல் போஸ்ட் அருகே நண்பனின் உடலை வைத்து, ஒரு பந்தை மெதுவாக உருட்டி விட்டு, அந்தப் பேழையாலேயே பந்தை மோதச் செய்து ஒரு 'இறுதிக் கோல்' அடித்தார்கள். அந்த நண்பனே கடைசி முறையாக கோல் அடித்ததை போல அவர்கள் உருவாக்கிய அந்த காட்சி... அங்கிருந்த அனைவரையும் கதறி அழ வைத்தது.
"மச்சான்... எழுந்து வாடா... இன்னொரு கோல் அடிக்கலாம்" என்று அவர்கள் அழுத குரல் அந்த மைதானம் எங்கும் எதிரொலித்தது. தோளோடு தோள் நின்ற நண்பனை, ஒரு பெட்டிக்குள் வைத்து மைதானத்தில் பார்ப்போம் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
இந்தக் காட்சிகள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன. மரணம் ஒரு மனிதனை பிரிக்கலாம், ஆனால் அந்த ஆன்மாக்களுக்கு இடையே இருந்த நட்பை பிரிக்க முடியாது என்பதற்கு இந்த 'இறுதிக் கோல்' ஒரு சாட்சி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications