பிடி கத்தரியால் எதிர்கால சந்ததியினருக்கு பாதிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை

தமிழ் மருத்துவக் கழகம், அன்னம் பசுமைக் கூடம், சித்திரமும் கைபழக்கம் ஓவிய இயக்கம் ஆகியவை சார்பில், பயிர்களின் மரபணு மாற்ற பாதி்ப்பு குறித்த கருத்தரங்கம் நெல்லையில் நடந்தது.
நெல்லை தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய செயலாளர் ரமேஷ் ராஜா தலைமை வகித்தார். இயற்கை வேளாண்மை மையம் கணேசர ராஜா முன்னிலை வகித்தார். சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சிவராமன் பேசுகையில்,
'மரபணு மாற்ற பயிர்கள் விவசாய உற்பத்தியை பெருக்கவோ, விவசாயிகளுக்கு லாபத்தை அதிகரிக்கவோ உற்பத்தி செய்யப்படவில்லை.
செடிகள் மீது பூச்சிகளின் தாக்குதலை கட்டுபடுத்தவே மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உருவாக்கப்படுகின்றன. மரபணு மாற்ற பயிர்களில் பூச்சி, புழுக்களை கட்டுபடுத்தும் நச்சுத் தன்மை உள்ளது.
மரபணு மாற்றப்பட்ட பிடி கத்தரிக்காய் மூலம் எதிர்காலத்தில் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என முழுமையாக தெரியவில்லை. இந்த கத்தரிக்காய் மூலம் தோல் நோய், மலட்டுத்தன்மை, அலர்ஜி, சிறுநீரக கோளாறு ஆகியவை ஏற்படும் என கூறப்படுகிறது.
இதனால் பிடி கத்தரிக்காய்க்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தியாவில் பிடி பருத்தி மூலம் ஏராளமான விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். ஏராளமான கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது இதை பயன்படுத்த தொடங்கிவிட்டால் எதிர்காலத்தில் உண்மையான விதை கிடைக்காது. பிடி கத்தரிக்காய் அருகே பயிரிடப்பட்ட இடத்தில் உள்ள நாட்டு கத்தரிக்காய் கூட மகரந்த சேர்க்கையால் பிடி கத்தரியாக மாறும்.
கருவில் உள்ள குழந்தைகளுக்கு கூட பாதிப்பு ஏற்படும். எனவே பிடி ரக விதைகளை நிரந்தரமாக தடை செய்து எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டும்.
பிடி ரக கத்தரிக்காய் மற்றும் பிற மரபணு மாற்ற பயிர்களை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications