வேளாண் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்த விவசாயிகள்... நிதி அமைச்சர் உரையில் இடம்பெறாத அறிவிப்புகள்
சென்னை: விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்ட நிலையில் விவசாய கடன் தள்ளுபடி பற்றி எதுவும் இடம்பெறாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சுயசார்பு இந்தியா பொருளாதார தொகுப்பை கடந்த 3 நாட்களாக வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தொழில் நிறுவனங்கள், வங்கிகள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சலுகைகள் குறித்து நேற்றும் நேற்று முன் தினமும் உரையாற்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று விவசாயிகளுக்கான திட்டங்கள் பற்றி அறிவித்தார்.

விவசாய கடன் தள்ளுபடி பற்றியோ அல்லது விவசாய கடனுக்கான வட்டி தள்ளுபடி பற்றியோ இன்று நிதி அமைச்சரின் உரையில் எந்த அறிவிப்பும் இடம்பெறாதது விவசாய பெருங்குடி மக்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. இதனிடையே இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விவசாய சங்க தலைவர் தெய்வசிகாமணி, மத்திய அமைச்சரின் அறிவிப்புகள் அனைத்தும் தற்போதைய சூழலுக்கு பயன் தராத வகையில் உள்ளதாக கூறியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகளுக்கு மற்றொரு விவசாய சங்க தலைவரான பி.ஆர்.பாண்டியன் வரவேற்பு தெரிவித்துள்ளார். தொலைநோக்கு பார்வையுடன் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். விவசாயத் துறை சார்ந்த திட்டங்களை தாம் முழுமையாக வரவேற்பதாகவும், விவசாய கடன் தள்ளுபடி, புதிய கடன் தொடர்புடைய அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடியை தவிர கால்நடை, தேனீ வளர்ப்பு, விரைவில் அழியும் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சலுகைகள், அத்தியாவசிய பொருள் சட்டத்தில் திருத்தம், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க சட்டம் என எண்ணற்ற விவசாயிகள் நலன் சார்ந்த அறிவிப்புகள் நிதி அமைச்சரின் உரையில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications