ஹெக்டேருக்கு 50 டன் விளையும் மரவள்ளிக்கிழங்கு உருவாக்க திட்டம்
சேலம்:
ஹெக்டேருக்கு 50 டன் விளையும் மரவள்ளிக் கிழங்கு ரகத்தை உருவாக்க ஆராய்ச்சி மேற் கொள்ளப்படும் எனகோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கண்ணையன் கூறினார்.
சேலத்தில் மரவள்ளிக் கிழங்கு குறித்த கருத்தரங்கு நடந்தது. இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கண்ணையன் பேசியதாவது:
மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. உலக அளவில் மரவள்ளிக் கிழங்கின்விளைச்சல் ஹெக்டேர் ஒன்றிற்கு 10 டன்னாக உள்ளது.
இந்தியாவில் இது 18 டன்னாக உள்ளது. தமிழ்நாட்டில் இது 30 டன்னாகும். தமிழகம் தான் மரவள்ளிக் கிழங்குஉற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. 24 லட்சம் ஹெக்டேரில், 60 லட்சம் டன் மரவள்ளிக் கிழங்குகள் இங்கு உற்பத்திசெய்யப்படுகின்றன.
இதில் உணவுக்காகவும் தீவனத்திற்காகவும் 20 சதவீதம், ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி தயாரிக்க 80 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கின் உற்பத்தியை உயர்த்த வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிமேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வறட்சியைத் தாங்கி வளரும் மரவள்ளிக் கிழங்கு ரகம், ஹெக்டேருக்கு 50 டன் விளையும் மரவள்ளிக் கிழங்குஆகியவை குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
கருத்தரங்கில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் முதன்மை தொழில் நுட்ப மேம்பாட்டு திட்ட மேலாளர் எம்.ஏகிருஷ்ணன் பேசியதாவது:
மரவள்ளிக் கிழங்கிலிருந்து ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி தயாரிப்புத் திட்ட ஆராய்ச்சிக்காக ஸ்டேட் பாங்க் 40 லட்சரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது போன்ற வேளாண்மைத் திட்ட ஆராய்ச்சியில் எங்கள் வங்கிமுன்னோடியாக விளங்கி வருகிறது என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications