"தவெக அழைத்ததால் கட்சி மாறினேன்".. எம்ஆர் விஜயபாஸ்கர் பேச்சு எதிரொலி.. ஆளுநரிடம் திமுக புதிய புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவினர் அணுகியதால் கட்சி மாறினேன் என்று முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் பேசியிருந்த நிலையில், குதிரை பேரம் நடைபெற்றுள்ளதாகக் கூறி தவெகவுக்கு எதிராக ஆளுநரிடம் திமுக சார்பில் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் குதிரை பேரத்தில் ஈடுபட்டு மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் வசம் இழுக்கின்றனர் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக தவெக மீது வைத்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆளுநரிடம் அதிகாரப்பூர்வமாக இதுதொடர்பாக ஏற்கனவே திமுகவினர் புகார் கடிதம் அளித்துள்ளனர்.

dmk-complains-to-the-governor-alleging-horse-trading-behind-m-r-vijayabhaskars-resignation

மதிமுக உறுப்பினர்கள் 2 பேரை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தால் தானே வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவேன் என்று முதல்வர் ஜோசப் விஜய் கூறியதாக வைகோ கூறியது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை வைத்து தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி ஏற்கனவே திமுக புகார் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்த பின்னர், நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்பட்டு செல்லவில்லை என்றும், தவெகவினர் அழைத்ததால் கட்சியில் இணைந்தோம் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக, திமுகவினர் தற்போது ஆளுநரிடம் புகார் கடிதம் அளித்துள்ளனர்.

குறிப்பாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 41 பேர் இருக்கக்கூடிய நிலையில், கட்சியின் பொதுச் செயலாளருக்கு எதிராக 25 பேர் தவெக ஆட்சியமைப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து, அதிமுகவினர் தொடர்ந்து அதிமுகவில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வருகின்றனர்.

சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கரை ஆகியோர் தவெகவில் இணைந்த நிலையில், சமீபத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் தவெக அழைத்ததாலேயே இணைந்தோம் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்துள்ளதாகவும், ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி ஜனநாயகத்திற்கு எதிராக தவெக ஈடுபட்டுள்ளதாகக் கூறி புகார் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளனர்.

ஏற்கனவே, அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் சார்பில் சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து தவெகவில் இணைந்த எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆளுநர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்றும், அரசியலமைப்பு சட்டம் ரீதியாக ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு, கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+