கொத்து பரோட்டா.. முதல்வர் பேசும் பேச்சா இது.. டைம் வரட்டும் விஜய்க்கு இருக்குது- திருச்சி சிவா
தூத்துக்குடி: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக தவெக இடையே கடுமையான மோதல் உருவாகி வருகிறது. கரூர் சென்ற முதலமைச்சர் விஜய் திமுக, முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். இதனால் திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். எப்போதும் நிதானமாக பேசும் திமுக மூத்த தலைவர் திருச்சி சிவா, எங்கள் நேரத்திற்காக காத்திருக்கிருக்கிறோம்.
தூத்துக்குடியில் நடந்த திமுக நிகழ்ச்சியில் அக்கட்சி துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசுகையில், "யார் இருந்தாலும் எங்களின் தேர்வு சரியாக இருக்கும். எங்கள் மேடை மிகவும் எளிதாக இருக்கும். சில பேர் கலந்து கொள்ளும் கூட்டம். அவ்வளவுதான். நாங்கள் உயரத்தில் நின்று பேசினாலும், உயர்ந்தவர்களாக கருதி பேச மாட்டோம். எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக சற்று உயரமாக மேடை போட்டுள்ளோம். உங்களிடம் பேசும்போது நான் மிகவும் பொறுப்புணர்வுடன் பேசுவேன்.

இளைஞர்களை இணைக்க
காரணம் நான் திருச்சி சிவா என்பதற்காக இல்லை. நான் திமுகவின் பிரதிநிதி. என் வார்தைகள் கட்சிக்கு வலிமை சேர்க்க வேண்டும். புதிதாக எங்கே செல்வது என்கிற திசை தெரியாமல் இருப்பவர்கள் எங்கள் கூடாரத்தில் வந்து இணைய வேண்டும். எங்கள் இன்றைய கழகத்தின் தலைவர் ஸ்டாலின் உங்களுடன் நீண்ட காலமாக உறவாடி, அவர் பொறுப்புடன் செயல்பட்டு இளைஞர்களை வழிநடத்தினார். இளைஞரணியில் தொடங்கிய பயணம் மேயர், எம்எல்ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சர் என்று மாறியது.
நானும் சிறையில் இருந்து வந்த பிறகு தேர்தலில் போட்டியிட்டு டெல்லி சென்றேன். நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு காரணம் மக்களுடன் பணியாற்றியது தான். பொறுப்பு போனவுடன் பலரும் பதறுவார்கள். பொறுப்பு போனாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் நடமாடுவோம். எம்ஜிஆரின் பழைய படங்களில் கருப்பு, சிவப்பு நிறம் அதிகம் தெரியும். அவரின் ஆடையில் கருப்பு சிவப்பு தெரியும். கழக வளர்ச்சிக்காக நாடகங்கள் நடத்தியுள்ளார்.
முதிர்ச்சியில்லாத பேச்சு
மாநாடுகளில் கலந்து பேசியுள்ளார். ஆனால் இன்றைக்கு முதலமைச்சராக இருப்பவருக்கு அரசியல் அனுபவம் இல்லை. ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும். நாங்கள் மிகவும் பொறுமையாக இருக்கிறோம். காலம் கனியும் வரை காத்திருப்போம். ஓடு மீன் ஓட உறுமின் பாய்ந்து வருகிற வரை காத்திருக்குமாம் கொக்கு. கொக்கு உயிருடன் இருக்கிறதா என்கிற சந்தேகம் எழலாம். ஆனால் மீன் வருகிற போது சரியாக தாக்கி இரையை எடுத்து பறந்து செல்லும். நாங்களும் எங்கள் நேரத்திற்காக குறி வைத்து காத்திருப்போம்.
அரசியல் முதிர்ச்சி இல்லாமல் வந்துவிட்டார். மக்களின் பிரச்சனைகளை அணுகுவதில் முதிர்ச்சி தேவை. அவரும், அவருடன் இருப்பவர்களும் பேசுகிற பேச்சு இருக்கிறதே. நாங்கள் மிகவும் பக்குவப்பட்டவர்கள். அதனால் அமைதியாக இருக்கிறோம். கழகம் பொறுமையாக இருந்தாலும், கருத்துகளை சொல்லுவோம். இவர் மக்களுக்காக ஏதாவது செய்துள்ளாரா. வைச்சு செய்யுங்க. கொத்து புரோட்டோ இதெல்லாம் கஷ்டமாக இருக்கிறது. எங்கள் நேரம் வரட்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications