தமிழகத்தில் மேலும் 25 உழவர் சந்தைகள்: வீரபாண்டி ஆறுமுகம்
சென்னை: தமிழகத்தில் மேலும் 25 உழவர் சந்தைகள் தொடங்கப்படும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று விவசாய மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம்:
இயற்கை பேரழிவு, பூச்சி நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி பாதிக்காமல் தடுக்க கோவை, தஞ்சை, திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், ஈரோடு, தேனி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் 92 ஆயிரத்து 500 ஏக்கர் தென்னை சாகுபடி பரப்பில் ரூ.265.52 லட்சம் செலவில் தென்னை காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் மேலும் 25 உழவர் சந்தைகள் இந்த ஆண்டு தொடங்கப்படும். சந்தையின் அமைவிடங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
திருச்சி, மோகனூர், ஸ்ரீவைகுண்டம், சின்னமனூர் ஆகிய இடங்களில் வாழையை பழுக்க வைக்கும் மையங்கள் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும்.
செம்மை நெல் சாகுபடியினை 21.25 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்வதற்கான செயல்விளக்கம் 50 ஆயிரம் இடங்களில் ரூ.15 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
பயறு வகைகளில் 2 சத டி.ஏ.பி. கரைசல் தெளிக்கும் திட்டம் 28 மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் செயல்படுத்தப்படும்.
பயறு உற்பத்தியை பெருக்குவதற்கான வரைவு திட்டம் செயல்படுத்தப்படும்.
ஊடுபயிராக இல்லாமல் துவரையை தனிப்பயிராக பயிரிட ஊக்குவிக்கப்படும்.
2 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 1,650 கிராமங்களில் தரமான விதை கிடைக்க விதை கிராம திட்டம் தொடங்கப்படும்.
வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களுக்கு இந்த ஆண்டு 100 ஜீப்புகள் வழங்கப்படும்.
மா, சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு வழங்கப்படும் ரூ.22,500, மானியம் ரூ.30 ஆயிரம் ஆகவும், முந்திரி சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு வழங்கப்படும் ரூ.15 ஆயிரம் மானியம் ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் சுய உதவி குழுக்களுக்கு மானியத்தில் வழங்கப்படும்..." என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 130 லட்சம் ஹெக்டேர் ஆகும். இதில் சுமார் 51 லட்சம் ஹெக்டேர்தான் சாகுபடிக்கு உள்ளது. நிகர பாசன பரப்பு 68.63 லட்சம் ஹெக்டேர்.
மேட்டூர் அணை நிரம்பி உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டு பருவ மழை பொய்க்காமல் இருந்தால் மட்டுமே 28.63 லட்சம் ஹெக்டேர் பாசனம் சாகுபடி செய்யப்படும். 22.37 லட்சம் ஹெக்டேர் மானாவரி சாகுபடி நிலப்பரப்பு ஆகும்.
தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு 930 மி.மீ. ஆக உள்ளது. இந்த அளவு மழை பெய்யாவிட்டால் பாதிப்புக்கு ஆளாக வேண்டிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது..." என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications